Knee Strength Exercise: மூட்டு வலி காணாமல் போக இதை செய்து பாருங்கள்!

  • SHARE
  • FOLLOW
Knee Strength Exercise: மூட்டு வலி காணாமல் போக இதை செய்து பாருங்கள்!


Knee Strength Exercise: வயது வரம்பின்றி மூட்டு வலிகள் வரத் தொடங்கிவிட்டன. மூட்டு வலி வர இதுதான் காரணம் என கூற முடியாது. மூட்டு வலி வர பலக் காரணங்கள் உண்டு. எலும்பு தேயம்மானம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது, நீண்ட நேரம் நடப்பது போன்ற பல காரணங்களால் மூட்டு வலி வருகிறது. சில நேரத்தில் நடக்கும் போது கால் நகர்ந்து கீழே விழும் போது முட்டி லேசாக மடங்கினாலும் வலி தொடரும். பருமனாக உள்ளவர்களுக்கு எடை காரணமாக மூட்டு வலி வரலாம்.

முழங்கால் சிகிச்சை

இந்தியாவில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழங்கால் வலியில் இருந்து விடுபட உடற்பயிற்சி சிறந்த மூலமாகும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க உதவும் 5 ஓட்டப் பயிற்சிகள்

முழங்கால் வலியைப் போக்க உடற்பயிற்சி

பொதுவாக முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த முழங்கால் நீட்டி மடக்குதல் போன்ற உடற்பயிற்சி செய்வது நல்லது. முழங்காலை சரியாக நீட்டவில்லை என்றால், வலி ​​மோசமாகலாம். முழுமையாக நீட்ட தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெறும் நாற்காலியைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இந்தப் பயிற்சியை வாரம் இருமுறை செய்து வந்தால் முழங்காலின் வலிமை அதிகரித்து வலி குறையும். சேரில் அமர்ந்து காலை உயர்த்தி மடக்குங்கள்.

மூட்டுகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

மூட்டுகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். முழங்கால் பிரச்சனை உள்ளவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதையும் சரிவுகளில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். முழங்கால்களை வளைக்கும் பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களையும் செய்யக்கூடாது.

வலியின் போது தீவிர முயற்சி வேண்டாம்

முழங்கால் இருக்கும் முயற்சி செய்கிறோம் என்ற பேரில் எதையும் தீவிரமாக செய்யக் கூடாது. முயற்சி செய்து முயற்சி செய்து வலியையும் ஆபத்தையும் அதிகரிக்கக் கூடாது. மெதுமெதுவாக முயற்சி செய்யுங்கள், உரிய மருத்துவரை அணுகுங்கள். ஷஷாங்காசனம் செய்வது கூடுதல் சிறப்பு.

தசைகளை வலுப்படுத்தம் பயிற்சி

சுவரில் இருந்து 10 அங்குலம் தள்ளி நிற்கவும். ஒரு பாதத்தை மற்றொன்றுக்கு முன்னால் வைக்கவும். உங்கள் முழங்கால்களை சுவரை நோக்கி வளைக்கவும். நீங்கள் நகராமல் சுவரை நோக்கி முழங்கால்களை தள்ள வேண்டும். உங்கள் கால்களில் ஏற்படும் அழுத்தம் தசைகளை வலுப்படுத்தும்.

வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்

உங்கள் கால் தசைகளை வலுப்படுத்த நீங்கள் தினமும் ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பிட்ட பயிற்சிகளை வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாக வாழலாம். கால்விரல்கள் வலுவாக இருந்தால் கால்களும் வலுவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்கிப்பிங்

தினமும் ஸ்கிப்பிங் செய்தால் உடல் வலுபெறும். உங்கள் தசைகள் வலுவடைந்து உடல் முழுவதும் இலகுவாக இருக்கும். எடை குறைவதற்கும் இது நல்ல உடற்பயிற்சி.

இந்த பயிற்சியானது இடுப்பு, தொடை, இடுப்புப் பகுதி மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. சைட் ஆக படுத்துக் கொள்ள வேண்டும். இடது புறம் திரும்பி படுத்திருந்தால் வலது காலை அப்படியே மேல் நோக்கி தூக்கி இறக்க வேண்டும். அதே வலது புறம் திரும்பி படுத்து இடது காலை மேல் நோக்கி தூக்க வேண்டும். ஒரு நான்கு அங்குலம் வரை மேலே தூக்கினால் போதுமானது.

இதையும் படிங்க: கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?

உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, கால் தசைகளை வலுப்படுத்துவது முக்கியம். இதுபோன்ற குறிப்புகள் முழங்காலை வலுப்படுத்த உதவும் என்றாலும் தீவிரத்தை உணர்ந்து மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்