Best Morning Drink For Good Health: இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் காரணமாக பலரும் பல உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். இதனால் முதுமையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகரிக்க, அதிகரிக்க நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். எனவே, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது நம் வீட்டிலேயே சில முறைகளைக் கையாளலாம். இதன் மூலம் எளிய பிரச்சனைகளிலிருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஆரோக்கியமான பானம் தயாரிக்கும் முறையைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kovil Puliyodharai Powder: கோவில் சுவையில் வீட்டிலேயே புளியோதரை பவுடர் தயாரிப்பது எப்படி?
நட்ஸ் மற்றும் விதைகள்
உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியதாகவும், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் நட்ஸ் மற்றும் விதைகள் உதவுகிறது. இதன் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக முந்தைய காலத்தை விட நட்ஸ்கள் மற்றும் விதைகளின் நுகர்வு அதிகரித்து விட்டது. இதில் முந்திரி, திராட்சை, பாதாம், வால்நட் போன்ற அனைத்துமே அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக தனித்துவமாக அறியப்படுகிறது.
இவை ஒவ்வொன்றுமே குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இவ்வாறு உடலைப் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வீட்டிலேயே நட்ஸ் மற்றும் விதைகளைக் கொண்டு பானம் தயார் செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு குடிக்க வேண்டிய பானம்
தேவையானவை
- முந்திரி - 6
- பிஸ்தா - 6
- வால்நட் - 1
- பாதாம் - 6 (ஊறவைத்து தோல் நீக்கப்பட்டது)
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
- அத்திப்பழம் - 2
- பேரீச்சம்பழம் - 2
- வாழைப்பழம் - 1
- பால் - 1 டம்ளர்
- பரங்கிக்காய் விதைகள் - 1 ஸ்பூன்
- தர்ப்பூசணி விதைகள் - 1 ஸ்பூன்
இந்த பதிவும் உதவலாம்: Gulkand Milk Benefits: தினமும் தூங்கும் முன் குல்கந்து பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பானம் தயாரிக்கும் முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், வேர்க்கடலை, வால்நட், பரங்கிக்காய் விதைகள், தர்ப்பூசணி விதைகள் போன்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும்.
- பிறகு அடுத்த நாள், அதை அப்படியே எடுத்துக் கொண்டு, அதில் பால், மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளலாம்.
- இப்போது சூப்பரான சுவையான ஸ்மூத்தி தயாராகி விட்டது.
- இந்த பானத்தை காலை உணவுக்குப் பதிலாக பருகி வரலாம். இவ்வாறு தினந்தோறும் காலையில் குடித்து வருவது, உடலில் எந்த நோய்களையும் சேர விடாமல் தடுக்கலாம். இதில் சேர்க்கப்படும் நட்ஸ் வகைகள் உடலுக்குத் தேவையான நன்மைகளைத் தருகிறது.
- உடலில் உள்ள ஹார்மோன்களைச் சமப்படுத்த விதைகள் பெரிதும் உதவுகிறது. விதைகளை உட்கொள்வது உச்சி முதல் பாதம் வரை தரும் எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.

இந்த சிறந்த ஸ்மூத்தியைப் பருகுவது வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கலாம். ஆரோக்கியமான உடல் எடை மேம்பாட்டின் மூலம் நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட தீவிர நோய்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Mochai Kottai Benefits: இது தெரிஞ்சா மொச்சைக் கொட்டையை சாப்பிடாம விட மாட்டீங்க!
Image Source: Freepik