Healthy alternative drinks to coffee: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஆனால் நாம் பெரும்பாலும் காலையில் காபி, டீ, பால் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் காஃபின் உட்கொள்வது உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, பதட்டத்தை ஏற்படுத்தலாம். மேலும் இது தூக்கமின்மை பிரச்சனையை மோசமாக்குகிறது. எனவே காலை வழக்கத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வழிகளில் காபிக்குப் பதிலாக சில ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் காபிக்கு மாற்றாக உதவும் ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்.
காபிக்குப் பதிலாக குடிக்க வேண்டிய பானங்கள்
கிரீன் டீ
கிரீன் டீ அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பெரிதும் அறியப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது காலையில் அருந்தக்கூடிய சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக அமைகிறது. கிரீன் டீயில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Drinking Salt Water: குடிநீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?
மஞ்சள் பால்
கோல்டன் மில்க் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானமாக அமைகிறது. மஞ்சளைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த பால் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. இதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் முக்கியமாக கால்சியம், மக்னீசியம் மற்றும் குர்குமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது இதயம், மூட்டு வலி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
மேட்சா டீ
இது ஒரு பாரம்பரிய ஜப்பானிய பானமாகும். மேட்சா டீ அருந்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இந்த ஆரோக்கியமான பானம் உடல் எடையைக் குறைக்கவும், சிறந்த நினைவாற்றலைத் தரவும் உதவுகிறது. இது சிறப்பு பதப்படுத்தப்பட்ட பச்சை தேயிலை இலைகளில் இருந்து பெறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்வது நாள் முழுவதும் தொடர்ச்சியான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இது காபி அருந்துவதற்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
கொம்புச்சா
பல நூற்றாண்டுகளாகவே, கொம்புச்சா அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இந்த புளித்த தேநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் குறைவான சோடியம் உள்ளது. கூடுதலாக கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு இல்லை. இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இவை இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இந்த பானம் உடலில் கொழுப்பைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Drink: காலையில் இந்த ஒரு ட்ரிங் குடிங்க! ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினசரி காலையில் காபிக்கு மாற்றாக எலுமிச்சை நீர் அருந்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் நீரேற்றம், செரிமான மேம்பாடு மற்றும் மேம்பட்ட வளர்ச்சிதை மாற்றம் போன்றவை எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. காலையில் எலுமிச்சை நீருடன் தொடங்குவது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காலையில் காபிக்கு மாற்றாக, இந்த ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
Image Source: Freepik