Chia Seeds For Weight Loss: நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிப்பது முக்கியம். உங்கள் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது எடை இழப்பை ஊக்குவிக்கும்.
எடை இழப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு சியா விதைகள் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிறிய விதைகளை கொண்டு பல கிலோவை ஈஸியாக குறைக்கலாம். இதனை உங்கள் உணவில் எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பதை இங்கே காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

எடையை குறைக்க சியா விதை உதவுமா?
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்ப்பதால், நீங்கள் நீண்ட நேரம் முழுமையாக உணர்வீர்கள். இதனால் அடிக்கடி உணவு உட்கொள்வது தடைபடும். இது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
எடையை குறைக்க சியா விதையை எப்படி பயன்படுத்துவது?
சியா விதைகளை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் உடல் எடையை குறைக்க முயல்கிறீர்கள் என்றால், இதனை காலை உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும். மேலும் இரவு உறக்கத்திற்கு முன் இதனை சாப்பிட வேண்டும்.
இதனை ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் அளவு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனை எடுக்கும் போது, அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், இதனை ஓட்ஸ், தயிர், ஸ்மூத்தி, சாலட், சூப், மஃபின் ஆகியவற்றுடன் இணைத்து சாப்பிட வேண்டும்.
சியா விதைகளின் பிற நன்மைகள்
* சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துகள், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
* சியா விதையில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்தில் சிறந்த பங்கு வகிக்கிறது.
* சியா விதைகளில் உள்ள புரதங்கள், தசைகளை வலுவாக்க உதவுகிறது.
பின் குறிப்பு
சியா விதைகள் எடையை குறைக்க உதவும். இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகள் உள்ளன. ஆகையால் நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசன பெறுவது நல்லது.
Image Source: Freepik