தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும், சியா விதைகள் (Chia Seeds) ஒரு சிறந்த சூப்பர் ஃபுட் என அறியப்படுகிறது. ஆனால், அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று பிரபல குழந்தை நல ஆலோசகர் மற்றும் உணவுமுறை நிபுணர் டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
சியா விதைகளில் என்ன இருக்கிறது?
சியா விதைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும். 100 கிராம் சியா விதைகளில் –
* 486 கலோரி
* 42 கிராம் கார்போஹைட்ரேட்
* 34 கிராம் நார்ச்சத்து
* 16 கிராம் புரதம்
* 30 கிராம் நல்ல கொழுப்பு
* 17 கிராம் ஓமேகா–3 கொழுப்புகள்
* கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து
இவை அனைத்தும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?
டாக்டர் அருண்குமார் கூறுகையில், “சியா விதைகள் உண்மையில் சூப்பர் ஃபுட் தான். ஆனால், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் தினசரி மாலை வேளையில் பஜ்ஜி, ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்தி, அதற்குப் பதிலாக சியா விதைகள் கலந்து ஜூஸ் அல்லது லெமன் வாட்டர் எடுத்துக் கொண்டால், உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், அதிக அளவில் உணவு சாப்பிட்டுவிட்டு, கூடுதலாக 2 ஸ்பூன் சியா விதைகள் சாப்பிட்டால் எந்த பயனும் கிடையாது” என்றார்.
தொப்பையை குறைக்கும் ரகசியம்!
* சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரப்ப செய்கிறது.
* சியா விதைகள் நீரை இழுத்துக்கொண்டு, வயிற்றில் ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி, பசியைக் கட்டுப்படுத்துகிறது.
* இதனால், அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு சியா விதைகளை முறையாக பயன்படுத்தினால், தொப்பையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், எடையை கட்டுப்படுத்தவும் உதவும்.
View this post on Instagram
இறுதியாக..
சியா விதைகள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். ஆனால் அதற்காக உணவு மற்றும் வாழ்க்கை முறையையும் சரி செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன் சேர்த்து சியா விதைகளை எடுத்துக்கொண்டால் தான் உண்மையான பலன் கிடைக்கும் என்று டாக்டர் அருண்குமார் வலியுறுத்தியுள்ளார்.