Fenugreek seeds benefits for blood sugar regulation and fat loss: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அந்த வகையில், மசாலாப் பொருள்களில் ஒன்றாக விளங்கும் வெந்தயம், உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்டவை அடங்குகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாடு, முடி ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், வயிற்றுப்பிரச்சனைகள் என தனித்தனியே பல்வேறு மருந்துகள் மற்றும் பராமரிப்பு முறைகளைக் கையாள்கிறோம். ஆனால் உண்மையில் வெந்தயம் ஒன்றின் உதவியுடன் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
வெந்தயம் எவ்வாறு கொழுப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்பது குறித்து மருத்துவர் ரதி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மருத்துவரின் கருத்துப்படி, வெந்தயம் உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய சிறந்த மசாலா ஆகும். இதில் தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fenugreek To Control Diabetes: ரத்த சர்க்கரை அளவை கடகடன்னு குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க...!
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரத்த சர்க்கரையைக் குறைப்பதற்கு
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. வெந்தய விதைகளில் 4-ஹைட்ராக்ஸிசோலூசின் (4-OH-Ile) என்ற அமினோ அமிலம் காணப்படுகிறது. இது வெந்தயத்தில் மிகுதியாகக் காணப்படும் இலவச அமினோ அமிலமாகும். இவை இரண்டுமே, நம் உடலில் சர்க்கரை தேங்கியிருப்பதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. ஆய்வுகளில், இது சர்க்கரை அதிகரிப்பதைக் குறைக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் குறைய
பொதுவாக, கெட்ட கொழுப்புகள் என்றழைக்கப்படும் எல்டிஎல் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியதாகும். வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள் இந்த கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. அது மட்டுமல்லாமல், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த ஓட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சீராக உள்ளது. இதனால், இவை பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
உடல் பருமனைக் குறைக்க
வயிற்றில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்று பகுதியை முழுமையாக வைத்திருப்பதன் மூலம் அதிக உணவு உட்கொள்ளலைத் தடுக்கிறது. தண்ணீருடன் வெந்தயத்தைச் சேர்த்து எடுத்துக் கொள்வதால் நிறைய சாப்பிடும் உணர்வைத் தடுக்கலாம்.
நெஞ்செரிச்சலைக் குறைக்க
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. இந்நிலையில், வெந்தயம் உட்கொள்வது குடல் பகுதியில் ஒரு பாதுகாப்பை அடுக்க உருவாக்குகிறது. இதன் மூலம் வயிற்ரை குளிர்ச்சியாக வைத்திருக்க வழிவகுக்கிறது.
PCOS பிரச்சனைகளைக் குறைக்க
பெண்களுக்கான ஹார்மோன் பிரச்சனைகளைச் சரி செய்ய வெந்தயம் உதவுகிறது. மேலும் PCOS பிரச்சனைகளைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கும் உதவுகிறது. இதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 2 பொருள் இருந்தா போதும்.. அசத்தலான Hair Oil வீட்டிலேயே செய்யலாம்.!
தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு புதிய தாய்மார்களுக்கு உதவும் வகையில் அன்றாட உணவுகளில் வெந்தயம் சேர்க்கலாம். இது தாய்ப்பால் உற்பத்திக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே தாய்மார்கள் வெந்தயத்தை அன்றாட உணவவில் சேர்க்கலாம்.
வலிமையை அதிகரிக்க
ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பதில் வெந்தயம் மிகுந்த நன்மை பயக்கும். இது அவர்களின் உடலுக்கு சக்தியைத் தருகிறது. இது தசைகளுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.
இது தவிர, சரும ஆரோக்கியம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்குமே வெந்தய விதைகள் நன்மை தருவதாகக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: வெந்தயம் & இலவங்கப்பட்டை - PCOS பெண்கள் கவனிக்க வேண்டிய 2 சூப்பர்ஃபுட்ஸ்! மருத்துவர் பரிந்துரை..
Image Source: Freepik