Fri Sep 11, 2026 | 11:24 PM IST

வேக வேகமா எடை குறையணுமா? இந்த ஒரு பொருளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க!

Semolina for weight loss how does it help: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் உணவுப்பொருள்களில் ரவை ஒன்று.

இது ஆங்கிலத்தில் செமோலினா (Semolina) அல்லது சுஜி (Suji) என அழைக்கப்படுகிறது. நம் வீடுகளில் உப்புமா, கேசரி உள்ளிட்ட உணவுகளில் ரவை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். இதன் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த செமோலினா உடல் எடை குறைப்பிற்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உடல் எடையைக் குறைக்க செமோலினா அல்லது ரவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் எடை குறைய ரவை தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Flours: எகிறும் உடல் எடையை சட்டென குறைக்க எந்த மாவு வகை சிறந்தது?

உடல் எடை குறைய ரவை எவ்வாறு உதவுகிறது?

ஆய்வின் படி, அதிக உணவு நார்ச்சத்துக்கள், குறைந்த ஆற்றல் அடர்த்தி மற்றும் அதிக புரத உட்கொள்ளல் உள்ளிட்ட உணவுமுறைகள், கலோரி பற்றாக்குறையை உருவாக்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுத்திட்டத்தைப் பின்பற்றும் போது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட எவ்வாறு எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.

புரதச்சத்து நிறைந்த ரவை

ரவை ஒரு சிறந்த உயர் புரதம் நிறைந்த உணவாகும். மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில், இது ஒரு கிராமுக்கு அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில், இது தசை திசுக்களின் உருவாக்கம் மற்றும் சரி செய்வதற்கும் உதவுகிறது. இது உடல் எடையிழப்புக்கு அவசியமாகிறது.

ஆராய்ச்சியின் படி, உணவில் புரதத்தைச் சேர்ப்பது பசியைக் குறைத்து எடையிழப்பின் போது தசை வெகுஜனத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது கொழுப்பு இழப்பை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தவிர, நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்க இது உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உணவை மென்று சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த ரவை

ஆய்வின் படி, அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்கிறது. இதன் நார்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது ஓய்வில் இருக்கும்போது கூட உடல் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. அந்த வகையில் ரவை அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதனை உணவில் சேர்த்துக்கொள்வது எடை இழப்பு முயற்சிகளை மேம்படுத்துகிறது. ஆய்வில் தினமும் ஒரு கிராம் நார்ச்சத்து மட்டும் சேர்ப்பது கூடுதல் எடை இழப்புக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.

நடுத்தர கிளைசெமிக் குறியீடு

ரவை அல்லது செமோலினா நடுத்தர கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகும். இது இரத்த சர்க்கரை அளவை மிதமான வேகத்தில் உயர்த்துகிறது. எனினும், இதை மற்ற ஆரோக்கியமான பொருள்களுடன் சாப்பிடுவதன் மூலம், உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, பாலில் செய்யப்படும் ரவை கஞ்சி, தண்ணீரில் செய்யப்படும் ரவையை விட அதிக ஜி.ஐ-யைக் கொண்டதாகும். அதே போல, தயிர் அல்லது சாலட்டுடன் சாப்பிடுவது, நட்ஸ், விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவது, செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குவதன் மூலம் ரவை சார்ந்த உணவுகளின் கிளைசெமிக் குறியீடைக் குறைக்கலாம்.

இது உடல் எடையிழப்புக்கு உதவுவதாக இருப்பினும், இதன் மற்ற சில காரணிகள் உடல் எடையிழப்பைத் தடுப்பதாகவும் அமைகிறது. இதனுடன், உடல் எடையிழப்புக்கு உதவக்கூடிய மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய அதிக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையிழப்பை எளிதாக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Sourdough Bread: எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும் புளிப்பு ரொட்டி! எப்படினு பாருங்க

Image Source: Freepik

Read Next

Garlic to Lower Cholesterol : கெட்ட கொழுப்பு கரையணுமா?… பூண்டை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content