Weight Loss Flours: எகிறும் உடல் எடையை சட்டென குறைக்க எந்த மாவு வகை சிறந்தது?

  • SHARE
  • FOLLOW
Weight Loss Flours: எகிறும் உடல் எடையை சட்டென குறைக்க எந்த மாவு வகை சிறந்தது?

இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில மாவு வகைகள் உதவுகிறது. உடல் எடையைப் பொறுத்த வரை, நாம் தேர்ந்தெடுக்கும் மாவு வகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட கோதுமை போன்ற பாரம்பரிய மாவுகள் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இல்லாததால் எடை அதிகரிப்பதற்கு பங்களிக்கலாம். அதே சமயம், வேறு சில மாவு வகைகள் அதிக நார்ச்சத்துக்கள் கொண்தாகவும், எடையிழப்புக்கு சிறந்த தேர்வாகவும் அமைகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்கும் வெண்பூசணி ஜூஸ்! எப்படி தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க உதவும் மாவு வகைகள்

ஓட்ஸ் மாவு

ஓட்ஸிலிருந்து நன்றாக அரைக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஓட் மாவு எடை இழப்புக்கான சிறந்த தேர்வாகும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக, இதில் உள்ள பீட்டா-குளுக்கன் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மாவில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆஒரக்கியத்திற்கும் உதவுகிறது. இதை உணவில் வேகவைத்த பொருட்கள் முதல் அப்பத்தை வரை பல்வேறு சமையல் வகைகளில் பயன்படுத்தலாம். இது ஒரு லேசான சற்று இனிப்பு சுவை கொண்டதாகும்.

தேங்காய் மாவு

வறண்ட தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் மாவு குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டதாகும். இது பசையம் இல்லாததாகவும், கெட்டோஜெனிக் உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு பிரபலமான தேர்வாகவும் அமைகிறது. தேங்காய் மாவில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், பசியைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையிழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் மாவு மற்ற மாவுகளை விட அதிக திரவத்தை உறிஞ்சும் தன்மையுடையதாகும். இது அப்பங்கள், ரொட்டி போன்றவற்றில் சேர்க்கலாம்.

குயினோவா மாவு

குயினோவாவிலிருந்து நன்கு அரைக்கப்பட்டு குயினோவா மாவு தயார் செய்யப்படுகிறது. இதில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு புரத உட்கொள்ளலை அதிகரிக்க இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. குயினோவா மாவில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரத உள்ளடக்கம் முழுமையாக உணரவைப்பதுடன், எடையிழப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. உணவில் குயினோவா மாவை கேக்குகள், ரொட்டி போன்ற தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுடன் நன்றாக இணைந்து உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? எடை குறைய இந்த ஈஸியா டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

பாதாம் மாவு

பாதாம் பருப்பை நன்கு அரைத்து தயார் செய்யப்படும் பாதாம் மாவு பசையமற்ற, ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இது குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இவை உடல் எடையிழப்பை ஊக்குவிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இதன் சுவையானது இனிப்பு மற்றும் காரமான உணவுகள் இரண்டிற்கும் பல்துறை தேர்வாக அமைகிறது.

தினை மாவு

ராகி எனப்படும் தினை மாவு உடல் எடையிழப்புக்கு ஏற்ற மாவு ஆகும். இது கால்சியம், இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த பசையம் இல்லாத தானியமாகும். இதில் உள்ள அதிகலவிலான கால்சியம் உள்ளடக்கம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இதன் அமினோ அமிலங்கள் எடை குறைப்பின் போது தசைகளை பராமரிக்க உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவித்து, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. கூடுதலாக, இது பயனுள்ள எடை மேலாண்மைக்கு பங்களிக்கிறது. தினை மாவு அல்லது ராகியை பொதுவாக கஞ்சி, தோசைகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

இவ்வாறு உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான மாவு வகைகள் பங்களிக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Quinoa for Weight Loss: மாஸ் வேகத்தில் உடல் எடையைக் குறைக்கும் குயினோவா! எப்படினு பாருங்க!

Image Source: Freepik

Read Next

உடல் எடையை குறைக்க அரிசி சாப்பிடலாமா? இதன் நன்மைகள் இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்