Ash Gourd Juice For Weight Loss How Does It Help: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும்.
இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் உணவுப்பொருள்களில் வெண்பூசணியும் ஒன்று. இதற்கு வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இதில் உடல் எடையைக் குறைக்க உதவும் வெண்பூசணி தரும் நன்மைகளையும், வெண்பூசணி சாறு தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்
வெண்பூசணி சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
நீரேற்றமிக்க பானம்
உடல் எடையிழப்புக்கு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். பொதுவாக அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகள் குறைந்த கலோரி அடர்த்தியைக் கொண்டுள்ளது. இந்த குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும், அதன் மூலம் உடல் எடையிழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதில் குறைந்த கலோரி அடர்த்தி கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுடன் அதிக கலோரி அடர்த்தி கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுடன் ஒப்பிடுகையில், அது குறிப்பிடத்தக்க உடல் எடையிழப்பை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த பானம்
எடை இழப்புக்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இந்த நார்ச்சத்துக்கள் முழுமையின் உணர்வை ஊக்குவித்து, ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையைக் குறைக்கவும், வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு
சில ஆய்வுகளில், பூசணிக்காய் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இவை நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இவை பசியைக் குறைத்து, அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. மேலும் பூசணிக்காயில் குறைந்த ஜிஐ இருப்பதால், இவை உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற உணவாக அமைகிறது. மேலும் குறைந்த ஜிஐ உணவுகள் கொண்ட உணவு அதிக எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. உயர் ஜிஐ உணவுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த ஜிஐ கொண்ட உணவுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனினும், நீரிழிவு நோய்க்கு இந்த சாற்றை மட்டும் நம்பி இருக்காமல், மருத்துவரின் பரிந்துரையில் உணவு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight loss Tips: எடையை குறைக்க பூசணி vs சுரைக்காய் எது நல்லது?
உடலைக் குளிர்ச்சியாக வைக்க
பலரும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக, நிறைய உடல் பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இந்த உடல் சூட்டை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது. எனவே, உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் பூசணி சாறு மிகுந்த நன்மை பயக்கும். பூசணி சாறு உட்கொள்வது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. வெண்பூசணி சாறு நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
வெண்பூசணி சாறு தயார் செய்யும் முறை
தேவையானவை
- வெள்ளைப்பூசணி - 1 சிறியது
- புதினா இலைகள் (விரும்பினால்)
- புதிய எலுமிச்சைச் சாறு - 1-2 தேக்கரண்டி (விரும்பினால்)
- சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை (விரும்பினால்)
வெண்பூசணி சாறு தயாரிப்பது எப்படி?
- முதலில் பூசணிக்காயை தோலுரித்து விதைகளை அகற்றி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின், இதை அரைத்து மென்மையான கூழ் கிடைக்கும் வரை கலக்க வேண்டும்.
- இந்த கலவையை வடிகட்டி சாற்றை மட்டும் தனியாக பிரித்தெடுக்கலாம்.
- இந்த சாற்றில் விரும்பினால் புதிய எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மேலும் சுவைக்காக தேன் அல்லது சர்க்கரையுடன் சாற்றை சேர்க்கலாம்.
- பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விரும்பினால் புதினா இலைகளால் அலங்கரிக்கலாம்.
இவ்வாறு வெண்பூசணி சாற்றை தயாரித்து உட்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Juice: கஷ்டமே படாம உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க போதும்!
Image Source: Freepik