Ash Gourd Juice Recipe For Weight Loss: அன்றாட வாழ்வில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் பருமன் அதிகமாகி பலரும் சிரமப்படுகின்றனர். இதனால் இளம் வயதிலேயே பல்வேறு தீவிர நோய்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவைத் தேர்ந்தெடுப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாதது போன்றவற்றால் இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைச் சந்திக்கலாம். இன்றைய காலகட்டத்தில் 30 முதல் 40 வயதை கடந்த உடனேயே இது போன்ற நோய்கள் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், நோய்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
உடல் பருமன் பிரச்சனை
பொதுவாக உடல் எடை அதிகரிப்பு என்பது உடலில் கொழுப்பு தேங்கி நிற்பதைக் குறிக்கிறது. இது அழகு பிரச்சனையாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால் பல நோய்கள் மற்றும் பல உடல் உபாதைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது நீரிழிவு நோய், இதய நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள், தூக்க பிரச்சனை மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight loss drinks: கஷ்டப்படாம உடல் எடையை குறைக்க தினமும் இந்த ஜூஸை குடியுங்க!!
இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, உடல் எடையைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். எனினும், சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக அமைகிறது. உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமம் அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், உடல் எடையைக் குறைப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. அதன் படி, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல் எடை குறைய சிறந்த பானம்
இயற்கையான வழியில் உடல் எடையைக் குறைக்க சில பானங்கள் உதவுகிறது. இவை உடல் எடையை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. இதில் உடல் எடை குறைய உதவும் சிறந்த பானம் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
தேவையானவை
- வெண்பூசணி – 2 கப் (தோலுரித்து விதை நீக்கி, நறுக்கியது)
- புதினா இலைகள் – 15
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு
- எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Millet For Weight Loss: உடல் கொழுப்பை சட்டுனு கரைக்க தினையை இப்படி செஞ்சி சாப்பிடுங்க
செய்முறை
- வெண்பூசணியை சுத்தம் செய்த பிறகு வெண்பூசணி, இஞ்சி, சீரகம், புதினா போன்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
- பின் இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.
- இந்த பானத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் அருந்த வேண்டும். குறிப்பாக, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை அருந்தி வருவதன் மூலம் உடல் எடை குறைவதைக் காணலாம்.
- அதே சமயம், ஆரோக்கியமான சரிவிகித உணவு மற்றும் போதிய அளவு உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். மேலும் கொழுப்பு நிறைந்த, எண்ணெய் சார்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் உடல் எடை குறைந்து, ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

வெண்பூசணி சாற்றின் நன்மைகள்
வெண்பூசணி அதிகளவு நீர்ச்சத்துக்கள் மற்றும் மிகக் குறைந்தளவிலான கலோரிகளையும் கொண்டுள்ளது. மேலும், இதில் சேர்க்கப்பட்ட இஞ்சி, சீரகம் போன்றவை செரிமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த சாற்றை அருந்துவது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்த பானத்தைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Jamun for Weight Loss: உடல் எடையை சட்டுனு வேகமாக குறைக்க நாவல்பழத்தை சாப்பிடுங்க
Image Source: Freepik