சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. முன்பெல்லாம் இளம் பருவத்தினர் மற்றும் நீண்ட நேரம் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் மட்டுமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் செல்போன், வீடியோ கேம் போன்றவை பிள்ளைகளை வீட்டிற்குள்ளே முடக்கிவிட்டதால், தற்போது குழந்தைகளிடையேயும் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
உடல் பருமன் கூடவே இதய நோய், சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகளையும் கொண்டு வருவதால், மக்கள் எவ்வளவு விலை கொடுத்தாவது உடல் எடையை குறைக்க முயல்கின்றனர். குறிப்பாக இன்டர்மீடியட் பாஸ்டிங், வாட்டர் டயட், ஃபேலியோ டயட், வீகன் என பல்வேறு வகையான உணவு கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். இப்படி உடல் எடையை குறைப்பவர்களுக்கு வெள்ளை பூசணிக்காய் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.
ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி, “வெள்ளை பூசணிக்காய் ஜூஸை தினந்தோறும் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள கொழுப்பை வலித்து எடுத்தது போல் நீக்கும்” எனக்கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு சமையல் குறிப்புகளை முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், மக்கள் இன்னும் அவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறவில்லை, பின்னர் விரக்தியடைகிறார்கள். அப்படியானால் இங்கு காட்டப்படும் பரிகாரம் சர்வ நிவர்த்தி போன்றது.
வெள்ளை பூசணிக்காயில் புரதம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. பலர் வெள்ளை பூசணியை பொரியல், கூட்டு மற்றும் இனிப்பு பலகாரங்களாக செய்து சாப்பிடுகின்றனர்.
ஆனால் தினமும் காலையில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?… தினமும் காலையில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸை ஏன் குடிக்க வேண்டும்? என்று பார்ப்போம்…
1.எடை குறைப்பு:
வெள்ளை பூசணிக்காயில் கலோரிகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் சாற்றை குடிப்பதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பதோடு, பசி எடுக்காது. உங்கள் வயிறும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக வெள்ளை பூசணி சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: அட ஆச்சர்யமா இருக்கே!! நின்று கொண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்!
2.டிடாக்ஸ் பானம்:
வெள்ளை பூசணிக்காயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன. இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
3.எனர்ஜி ட்ரிங்க்:
வெள்ளை பூசணி சாற்றில் துத்தநாகம், பாஸ்பரஸ், தயாமின், ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது சோர்வு, சோம்பலைப் போக்கி, உடலுக்கு ஆற்றலை நிரப்புகிறது. உடனடி ஆற்றலைப் பெறவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறு குடிக்கவும்.
4.செரிமானம்:
வெள்ளை பூசணி சாறு நார்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும் மற்றும் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பூசணிக்காய் சாறு தினமும் குடிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுவலி போன்ற நோய்கள் குணமாகும்.
5.இதய ஆரோக்கியம்:
வெள்ளை பூசணிக்காயில் பைட்டோஸ்டெரால் என்ற கலவை உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயமும் குறைகிறது.
Image Source: Freepik