Curry leaves for diabetes management: இன்றைய மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக உணவுமுறைக் கட்டுப்பாட்டின் உதவியுடனே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
அவ்வாறே, கறிவேப்பிலை பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதற்கு கறிவேப்பிலை உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவது உட்பட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கறிவேப்பிலை தருகிறது. ஏனெனில், கறிவேப்பிலையானது வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை உள்ளடக்கியதாகும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கறிவேப்பிலை என்ன நன்மைகளைத் தருகிறது என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Diabetes: சர்க்கரையைக் குறைக்க வெற்றிலையை இப்படி சாப்பிடுங்க.
கறிவேப்பிலையின் ஊட்டச்சத்துக்கள்
கறிவேப்பிலையின் வலுவான மற்றும் தனித்துவமான சுவை உணவுகளுக்கு கூடுதல் சுவை தருகிறது. எனவே தான் இது ஆயுர்வேதத்தில் ஒரு நிலையான தீர்வாக அமைகிறது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலை எவ்வாறு இரத்த சர்க்கரையை சீராக்குகிறது?
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, வகை 2 நீரிழிவு நோயில் 45%-ஐக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற சேதம் தொடர்பான நோய்களின் வரம்பைத் தடுக்க உதவுகிறது.
கறிவேப்பிலையில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமானத்தை மெதுவாக்குவதுடன், விரைவாக வளர்சிதை மாற்றமடையாது. இவ்வாறு இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இவ்வாறு உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு தானாகவே சீராகும்.
இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா இலை. எப்படி சாப்பிடணும் தெரியுமா?
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்துவது?
இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கு, கறிவேப்பிலையை இந்த வழிகளில் திறம்பட எடுத்துக் கொள்ளலாம்.
- முதலில் நீரிழிவு நோயாளிகள் காலையில் எட்டு முதல் 10 புதிய கறிவேப்பிலைகளை முதலில் மென்று சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் சிறிய கசப்பாக இருப்பினும், இந்த இலைகளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
- இதற்கு ஒரு கொத்து கறிவேப்பிலை இலைகளை சாறாக தயாரித்து சிறிது தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
- இது தவிர, கறிவேப்பிலையை சாலட்கள், சாதம், கறிகள் உள்ளிட்டவற்றில் சேர்த்து எடுத்துக் கொல்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
கறிவேப்பிலை சாப்பிடுவதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதைத் தவிர, கறிவேப்பிலை உட்கொள்வது மற்ற சில ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.
- கறிவேப்பிலையை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைத்து பிளேக் உருவாவதைத் தடுக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தினமும் கறிவேப்பிலையை சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
- சரும ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, கறிவேப்பிலையை உட்கொள்வதன் மூலம் முகப்பரு, தழும்புகள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்கலாம்.
- இதில் உள்ள வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் கண்பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது.
- கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முன்கூட்டிய நரையைத் தடுக்கவும் உதவுகிறது.
- இது தவிர, கறிவேப்பிலை உட்கொள்ளல் மன அழுத்தம், பதட்டத்தைப் போக்குகிறது. மேலும், மனதிற்கு அமைதியான விளைவைத் தருகிறது.
இவ்வாறு கறிவேப்பிலையை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், இதை எடுத்துக் கொள்ளும் முன்பாக, மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Curry leaves for diabetes: நீரழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை இப்படி சாப்பிட்டால்... சர்க்கரை சட்டுனு குறைஞ்சிடும்!
Image Source: Freepik