How Curry Leaves Help Manage Blood Sugar: இந்திய சமையலையும், கறிவேப்பிலையையும் பிரிக்கவே முடியாது என்ற அளவிற்கு இரண்டற கலந்துள்ளது. இப்படி கூட்டு, பொரியல், ரசம்,சாம்பர், குருமா என அனைத்திலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுவதற்கான ரகசியம் என்ன என்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. கறிவேப்பிலை வெறும் வாசனைக்காக மட்டுமல்ல அதன் மருத்துவ குணத்திற்காக தான் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியாததால் தான் சாப்பிடும் போது தூக்கிவீசுகிறோம்
ஆயுர்வேதத்தில், கறிவேப்பிலை மற்றும் மரப்பட்டைகள் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:
இந்த இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன.
இவற்றுடன், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நமது ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
நீரிழிவு நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே பிரச்சினை உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பச்சையாக கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது நல்லது. இல்லையெல், கறிவேப்பிலையை காயவைத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். தினசரி உணவிலும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக நீரழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரைக்கு மட்டுமல்ல இதற்கும் சூப்பர் தீர்வு:
கறிவேப்பிலையில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. அஜீரணம், வாயு, வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இருக்கும். வயிறு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படக்கூடிய செரிமான பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை ஒரு வரப்பிரசாதம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளே! இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா? - இத ட்ரை பண்ணுங்க!
இரத்த சோகைக்கு “குட்பை”:
இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சோகை நீங்கும். இது உடலில் ஆற்றலை தக்க வைக்கிறது.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா?
கறிவேப்பிலை சாப்பிட்டால் இந்த பிரச்சனையே வராது:
கறிவேப்பிலையில் முடி உதிர்வதை தடுக்கும் தன்மை உள்ளது. கறிவேப்பிலை சாப்பிட்டால் வெள்ளை முடி கருப்பாக மாறும். முடி வளர்ச்சியும் மேம்படும். கறிவேப்பிலையை கூந்தலில் தடவுவதும் பலன் தரும். மேலும், கறிவேப்பிலை சாப்பிடுவதால் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இந்த இலைகள் எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Image Source: Freepik