Guava Leaves For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா இலை. எப்படி சாப்பிடணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Guava Leaves For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா இலை. எப்படி சாப்பிடணும் தெரியுமா?

எனினும், இதை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் கொய்யா இலைகளை உட்கொள்வது எவ்வாறு நன்மை பயக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த அவை எவ்வாறு உட்கொள்வது என்பது பற்றி அறிய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் புவனேஷ்வரி (BAMS ஆயுர்வேதம்) அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதில் கொய்யா இலைகளைக் கொண்டு சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி மற்றும் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த கொய்யா இலைகளை எப்படி உட்கொள்வது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Vegetables for Diabetes: சர்க்கரை மளமளவென குறைய இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!

நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா இலை தரும் நன்மைகள்

டாக்டர் புவனேஷ்வரி அவர்களின் கூற்றுப்படி, கொய்யா இலைகளின் சுவையானது துவர்ப்புத் தன்மை கொண்டதாகும். இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர, கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆரோக்கியத்திற்கான தேசிய தகவல் (NIH) வெளியிடப்பட்ட ஆய்வின் படி, கொய்யா இலைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும், BMC ஜர்னலின் படி, உணவுடன் அல்லது அதற்குப் பிறகு கொய்யா இலைச் சாற்றை உட்கொள்வதால், இது நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஹைப்பர் இன்சுலினீமியா, இன்சுலின் எதிர்ப்பு, ஹைப்பர் கிளைசீமியா மற்றும் ஹைப்பர்லிபிடெமியா போன்றவற்றை மேம்படுத்த கொய்யா இலை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

சர்க்கரை நோயாளிகள் கொய்யா இலை சாற்றை எப்படி உட்கொள்வது?

கொய்யா இலையின் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இதற்கு கொய்யா இலைச் சாற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து அல்லது கொய்யா இலையை மூலிகை டீயாக அருந்தலாம். இதை சாப்பிட்ட பிறகு, கொய்யா இலை தண்ணீர் அல்லது தேநீர் அருந்தலாம். இதில் கொய்யா இலை சாறு, தண்ணீர் அல்லது தேநீர் போன்றவற்றை வீட்டிலேயே எளிதாக தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Wound Care: நீரிழிவு நோயாளிகள் சீக்கிரம் காயம் குணமாக இதெல்லாம் செய்யுங்க

கொய்யா இலை கொண்டு மூலிகை தயாரிப்பது எப்படி?

  • முதலில் 10-12 கொய்யா இலைகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • இப்போது பாத்திரம் ஒன்றில் குறைந்தது 2 கப் தண்ணீரை எடுத்து, அதில் கொய்யா இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி சிறிது ஆறவிட வேண்டும்.
  • விரும்பினால், இதில் இஞ்சியை சேர்த்து வேக வைக்கலாம்.
  • அதன் பிறகு, சிறிது தேன் அல்லது வெல்லம் சேர்த்து அல்லது நேரடியாக அப்படியே உட்கொள்ளலாம்.
  • இது தவிர, காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம்.
  • இதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

இவ்வாறு கொய்யா இலையின் உதவியுடன் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் கொய்யா இலையை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Herbal Drinks: கிடுகிடுவென சர்க்கரையைக் குறைக்கும் சூப்பர் மூலிகை பானங்கள் இதோ!

Image Source: Freepik

Read Next

Costus Igneus: இன்சுலின் செடி உண்மையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Disclaimer