Vegetables for Diabetes: சர்க்கரை மளமளவென குறைய இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Vegetables for Diabetes: சர்க்கரை மளமளவென குறைய இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன் படி, மருத்துவர்கள், உணவு நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் போன்றோர் உணவின் மூலம் உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், பராமரிக்கவும் முடியும் என நம்புகின்றனர். இதில் நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய சில காய்கறிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vegetables For Diabetics: சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

கேரட்

கேரட்டை ஒரு சூப்பர்ஃபுட் என்றே கூறலாம். ஏனெனில் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் கேரட் உதவுகிறது. அதாவது கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நீரிழிவு நோயாளிகளுக்கு என கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் கேரட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை வெளியீட்டை குறைத்து நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, கேரட்டில் மிகக் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் கேரட் காய்கறி, கேரட் ஜூஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சை இலைக் கீரைகள்

பச்சை இலைக் கீரைகளில் இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. கீரையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் லுடீன் போன்றவை கண்பார்வைக்கு இன்றியமையாததாக அமைகிறது. மேலும் ரெட்டினோபதியின் அபாயத்தைக் குறைக்கிறது. கீரையில் ஆல்ஃபா-லிபோயிக் அமிலம் காணப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, உடலில் இன்சுலினை அதிகரிக்கும் கூறுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் சுத்தமான மற்றும் சுகாதாரம் நிறைந்த கீரைகளை உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Leafy Vegetables Benefits: சர்க்கரை நோயாளிகளுக்கு இலை காய்கறி எவ்வளவு நன்மை தெரியுமா?

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியானது வைட்டமின் சி, ஈ, மற்றும் கே, கொழுப்பு அமிலங்கள் என உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், இதில் மிகக்குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவாகக் காணப்படுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராஃபேன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தக்காளி

தக்காளியில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் காணப்படுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும் உதவுகிறது. இவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தக்காளி சாறு அருந்தலாம்.

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் உள்ள குறைந்தளவிலான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக, கத்தரிக்காய் ஆனது திக அளவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கத்தரிக்காயில் உள்ள குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோயாளிகள் இந்தக் காய்கறிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Diet: ரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் தக்காளி ஜூஸ்; எப்படி சாப்பிடுவது என தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

Diabetic Wound Care: நீரிழிவு நோயாளிகள் சீக்கிரம் காயம் குணமாக இதெல்லாம் செய்யுங்க

Disclaimer