Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Foods for Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சூப்பர் புட்!

How to reduce blood sugar level immediately: செயலாற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இதை கட்டுக்குள் வைக்க முடியும். என்னதான் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி இருந்தாலும், அவர்களுக்கு என்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது இன்றும் தீராத குழப்பம்.

ஏனென்றால், உணவு மூலம் மட்டுமே அதை கட்டுக்குள் வைக்க முடியும். அந்தவகையில், குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள், அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : இரவில் தோன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.! கவனிக்க மறக்காதீர்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்

  • நீரிழிவு நோயாளிகள் முளைகட்டிய பயறு சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், இதில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. எனவே, இது ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதுடன் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது. மேலும், பசியை பெருமளவு கட்டுப்படுத்தும்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு. இதில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உங்களை நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அப்படியே இருக்கும். அத்துடன், முட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிடவும்

  • பெர்ரிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதே நேரத்தில், அதன் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. இது இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்கும். இது இனிப்புகளின் மீதுள்ள ஆசையையும் கட்டுப்படும்.
  • ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க முடியும். உண்மையில் இது ஒரு சிட்ரஸ் பழம், இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Avoid Foods For Diabetes: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் தொடக் கூடாத உணவுகள்!

  • பருப்பு வகைகளை உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதை சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்த வழி. உண்மையில் இது ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளது. நார்ச்சத்தும் சரியான அளவில் உள்ளது மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது, எனவே இது இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
  • அதே போல, நீரிழிவு நோயாளிகளும் கிட்னி பீன்ஸ் சாப்பிடலாம். இது குறைந்த ஜி.ஐ மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். இது தவிர, கரையக்கூடிய இழைகளும் இதில் காணப்படுகின்றன.

Pic Courtesy: Freepik

Read Next

இரவில் தோன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.! கவனிக்க மறக்காதீர்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content