Fri Sep 11, 2026 | 11:14 PM IST

Avoid Foods For Diabetes: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் தொடக் கூடாத உணவுகள்!

What Foods To Avoid With Diabetes: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான நோய்களில் ஒன்று நீரிழிவு நோய் ஆகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவற்றில் முதன்மையானதாக அமைவது உணவு முறையே ஆகும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தில் பல்வேறு வைத்திய முறைகள் மற்றும் மூலிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில உணவுகளும் அடங்கும். இவை ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும். எனினும் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவுகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சார் சவலியா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Papaya For Diabetes: பப்பாளி சாப்பிட்டா சர்க்கரை அளவு கூடுமா? குறையுமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால், உடலில் எதிர்மறையான விளைவுகள் உண்டாகலாம். இதில் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

வெல்லம்

நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகளில் வெல்லமும் அடங்கும். ஆனால், நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை எடுத்துக் கொள்ளலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும் வெல்லம் எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். சர்க்கரையை விட சமமான அல்லது அதிக அளவில் வெல்லத்தை உண்பது உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமற்றதாக மாறிவிடும். எனினும் வெல்லம் இரசாயனங்கள் சேர்காத இயற்கையானதாக கருதப்படுகிறது. மேலும் இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குறைந்த அளவு வெல்லத்தை உட்கொள்வது நல்லது.

வெள்ளை உப்பு

வெள்ளை உப்பு அதிகளவு அயோடினைக் கொண்டதாகும். இது நமது ஆரோக்கியத்திற்குத் தேவையான கனிமமாக இருப்பினும், இவை நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் பக்கவாதம், சிறுநீரகம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் அதிகமாகலாம். உப்பு நுகர்வு சர்க்கரை அளவைப் பாதிக்காது. எனினும் இதை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் உணவில் ஹிமாலயன் இளஞ்சிவப்பு உப்பு சேர்த்து கொள்வது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Walking For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கணும் தெரியுமா?

தயிர்

ஆயுர்வேதத்தில் தயிர் சூடான தன்மை கொண்டதாகும். இது செரிமானம் செய்ய கனமானதாகும். தயிரை உட்கொள்வதால் உடலில் கப தோஷம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் சோம்பல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கலாம். மார்பில் உள்ள காற்றுப் பாதைகளை சளி தடுக்கலாம். இது ஊட்டச்சத்துக்களை மோசமாக உறிஞ்சுவதற்கும், டிரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவிய அதிகரிக்கவும் காரணமாகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தயிரைத் தவிர்ப்பது நல்லது. மேலும் தயிர் உட்கொள்வது உடல் பருமன், கொலஸ்ட் ரால் போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கலாம்.

இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளாகும். எனினும் இதை உட்கொள்ள விரும்புபவர்கள் குறைந்த அளவில் அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது. அதே சமயம், உடல் நிலை மோசமடைந்தாலோ அல்லது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தாலோ சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Hearing Loss: சர்க்கரை நோய் கேட்கும் திறனை பாதிக்குமா? நிபுணர் தரும் விளக்கம்.

Image Source: Freepik

Read Next

Beetroot Benefits for Diabetes: சர்க்கரை நோயாளிகள் பீட்ருட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? - ஷாக்கிங் ரிசல்ட்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content