Papaya For Diabetes: பப்பாளி சாப்பிட்டா சர்க்கரை அளவு கூடுமா? குறையுமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Papaya For Diabetes: பப்பாளி சாப்பிட்டா சர்க்கரை அளவு கூடுமா? குறையுமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

அந்த வகையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியம் ஆகும். இதில் நீரிழிவு நோயாளிகள் பப்பாளியை உட்கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும் ஒன்றாகும். சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை உட்கொள்ளலாமா என்பதைப் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pista For Diabetes: சர்க்கரை நோய்க்கு உதவும் பிஸ்தா பருப்பு, எப்படி தெரியுமா?

நீரிழிவு நோய்க்கு பப்பாளி

பப்பாளிப்பழம் இன்று பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் பழமாகும். ஆனால், இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளலாமா என்பது கேள்வியாகவே உள்ளது. உண்மையாக, சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை உட்கொள்ளலாம். ஏனெனில், இவை குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைப்பதுடன், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய்க்கு பப்பாளி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.

சர்க்கரை நோய்க்கு பப்பாளி தரும் நன்மைகள்

பப்பாளியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு என்ன வகையான நன்மைகளைத் தருகிறது என்பது குறித்து காணலாம்.

  • பப்பாளியில் உள்ள குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
  • இதில் உள்ள பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • பப்பாளியில் சைமோபபைன் மற்றும் பப்பைன் போன்ற என்சைம்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் கொழுப்புகள் போன்றவற்றை எளிதில் ஜீரணிக்கக் கூடிய வடிவில் உடைக்கிறது. இவை இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.
  • இதன் வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து, தொற்று நோய் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
  • இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்க உதவுகிறது.
  • சமநிலையான அளவில் பப்பாளியை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Hearing Loss: சர்க்கரை நோய் கேட்கும் திறனை பாதிக்குமா? நிபுணர் தரும் விளக்கம்.

நீரிழிவு நோயாளிகள் பப்பாளி உட்கொள்ளும் முறை

  • புதிய பழுத்த பப்பாளியை உணவின் ஒரு பகுதியாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
  • தயிர் அல்லது ஓட்மீல் போன்றவற்றிற்கு பப்பாளியைச் சேர்த்து சாப்பிடலாம்.
  • பழ சாலட் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றில் நறுக்கிய பப்பாளியைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

எனினும், பப்பாளியை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் உள்ள இயற்கையான சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்.

இவ்வாறு நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சரியான அளவில் வைத்துக் கொள்ள பப்பாளி உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழங்களை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Black Sesame For Diabetes: இரத்த சர்க்கரையை சட்டென குறைக்க கருப்பு எள் தரும் மகிமைகள்

Image Source: Freepik

Read Next

Diabetic Hearing Loss: சர்க்கரை நோய் கேட்கும் திறனை பாதிக்குமா? நிபுணர் தரும் விளக்கம்.

Disclaimer