Papaya in Summer: கோடைக்காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன மாற்றங்கள் நடக்கும்?

  • SHARE
  • FOLLOW
Papaya in Summer: கோடைக்காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன மாற்றங்கள் நடக்கும்?


Health Benefits Of Eating Papaya In Summer: கோடைக்காலத்தில் பலரும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்புவர். இந்த காலகட்டத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களை குறைவாகவும், குளிர்ச்சியான குணம் கொண்ட பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதும் நன்மை பயக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும் ஒன்றாகும்.

ஏனெனில் பப்பாளி ஒரு சூடான பழம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் பப்பாளி பழத்தில் உள்ள நற்குணங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பப்பாளி உட்கொள்வது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. கோடைக்காலத்தில் பப்பாளியை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Daily Lassi Benefits: கோடை வெயிலில் உடலைக் காக்க ஜில்லுனு கூலா லஸ்ஸி குடிங்க!

கோடையில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடை இழப்பு

பப்பாளியில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இந்த நச்சு நீக்கமானது வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள குணங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதன் மூலம் தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம்.

நீரேற்றமிக்க பழம்

கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். எனவே உடலை நீரேற்றமாக வைத்திருக்க பப்பாளியை பகலில் சாப்பிடலாம். மேலும், பப்பாளியில் அதிகளவு நீராதரம் நிறைந்துள்ளதால், இவை உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பப்பாளி தருகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

கோடைக்காலத்தில் பப்பாளியை மிதமான அளவு உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனினும், பப்பாளியை காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில், பப்பாளியில் நிறைந்துள்ள சில தீங்கு விளைவிக்கும் கூறுகள் செரிமான பிரச்சனைகளை அதிகமாக்கலாம். அதே சமயம் பப்பாளியை மதிய நேரத்தில் மிதமான அளவில் உட்கொள்வது செரிமானத்தை ஆதரிக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பப்பாளியில் என்சைம்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளி இலை சாறு அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் பண்புகள் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Raw Papaya Benefits: பப்பாளியை காயாக சாப்பிடுவதால் நிகழும் ஆச்சரியங்கள் இங்கே…

சரும ஆரோக்கியத்திற்கு

பப்பாளியை உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பப்பாளியில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது. பப்பாளியை உட்கொள்வதுடன், இதை சருமத்தில் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு பப்பாளி

பப்பாளி பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளது. எனவே பப்பாளியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

முடி ஆரோக்கியத்திற்கு

பப்பாளியில் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை வழுக்கையைத் தடுக்க உதவுகிறது. இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதன் மூலம் கோடைக்காலத்தில் ஏற்படும் முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இவ்வாறு கோடைக்காலத்தில் பப்பாளி பழத்தை மிதமான அளவில் மற்றும் சரியான நேரத்தில் உட்கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea Vs Moringa Tea: கிரீன் டீ Vs முருங்கை டீ! இது ரெண்டுல எது பெஸ்ட் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Mango Seed Benefits: மாங்கொட்டையை இப்படி சாப்பிட்டால் உடல் எடை சட்டுனு குறையுமாம்!

Disclaimer