Summer fruits to eat for diabetic patients: கோடைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உடலிலிருந்து அதிக நீரிழப்பு ஏற்படும் காலமாக அமைகிறது. எனவே அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான உணவுகள், பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்கக்கூடிய பழங்கள் ஏராளம் உள்ளது.
ஆனால், அந்த பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். ஆம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுமுறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் எடுத்துக் கொள்ளும் சில ஆரோக்கியமான உணவுகள் இரத்த சர்க்கரையை உயர்த்தும் அபாயம் ஏற்படலாம். எனினும் சர்க்கரை நோயாளிகள் கோடைக்காலத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் சில ஆரோக்கியமான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits To Avoid Diabetic: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் இந்த ட்ரை ப்ரூட்ஸை சாப்பிடக்கூடாது?
கோடைக்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். இவை கார்போஹைட்ரேட்டுகளின் நிலையான அளவீட்டைப் பார்க்கிறது. இதில் சர்க்கரை நோயாளிகள் கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களைக் காணலாம்.
தர்பூசணி
இதில் கிளைசெமிக் குறியீடு (GI) அதிகமாக இருந்தாலும், 120 கிராம் அளவுள்ள தர்பூசணி பழங்கள் குறைந்த கிளைசெமிக் சுமையைக் கொண்டுள்ளது. 1 கப் தர்பூசணி துண்டுகளை சாப்பிடலாம் அல்லது புத்துணர்ச்சியூட்டும் சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், இதனுடன், வால்நட்ஸ், புதினா இலைகள், எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய், 1 டீஸ்பூன் நொறுக்கப்பட்ட ஃபெட்டா சீஸ் போன்றவற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகைகள் உள்ளது. இது நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை உடலில் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது. மேலும், இது இயற்கையாகவே இனிப்பு சுவையை வழங்கக்கூடியதாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் பெர்ரி பழங்களை சாப்பிடலாம்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் ஒரு அற்புதமான மூலமாகும். மேலும், இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் உள்ள பெப்சின் என்ற நொதியானது புரத செரிமானத்தை ஆதரிக்கிறது. இதன் செரிமான நொதிகள் மற்றும் மிதமான கிளைசெமிக் குறியீட்டுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது வீக்கத்தைக் குறைக்கவும், நிலையான இரத்த சர்க்கரை அளவை உறுதி செய்கிறது.
கொய்யாப்பழம்
கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்கள்
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரஞ்சு ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு என்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்காது.
பிளம்ஸ்
இது குறைந்த சர்க்கரை மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டதாகும். இவை திருப்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில், இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கிறது. அதே சமயத்தில், ஒரு சுவையான இனிப்புச் சுவையை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
ஆப்பிள்கள்
இது கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இது இரத்த சர்க்கரை உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது நீண்டகால ஆற்றலை வழங்குகிறது. இது ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த பழங்களை சாப்பிடலாம்
Image Source: Freepik