Best Fruits For Diabetes: சர்க்கரை நோயாளிகள் சில மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், அவற்றைக் கட்டுக்குள் வைக்க உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சில ஆரோக்கியமான உணவு வகைகளில் பழங்களையும் சேர்க்க வேண்டும். அதே நேரம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவைப் பராமரிப்பதும் அவசியமாகும்.
கிளைசெமிக் இன்டெக்ஸ் & கிளைசெமிக் லோடு
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு என குறிப்பிடப்படுகிறது.
இதில், கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவு எவ்வாறு விரைவாக பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பை மெதுவாக அதிகரிக்கிறது. இது உணவுக்குப் பின்னர் ஏற்படும் மாற்றங்களில் உடல் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.
கிளைசெமிக் லோடு என்பது உணவுக்குப் பின்னர் இரத்த சர்க்கரை அளவு நடவடிக்கையைக் குறிப்பதாகும். இது கிளைசெமிக் இன்டெக்ஸ் போல் அல்லாமல் உற்பத்தியில் கார்போஹைட்ரேட்டுகளின் வகையை மட்டுமல்லாமல் அதன் நேரடி அளவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் குறியீடு ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Almond milk Benefits: சர்க்கரை நோயாளிகள் பாதாம் பால் குடிக்கலாமா?
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவு முறைகளைக் கையாள்வதற்கு சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம்.
பேரிக்காய்
பேரிக்காய் ஒரு சுவையான பழம் மட்டுமல்லாமல், பரிந்துரைக்கப்பட்ட நார்ச்சத்து அளவுகளையும் கொண்டுள்ளது. கோடைக்காலங்களில் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதில் ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனை உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரஞ்சு பழம் மிகச்சிறந்த பழமாகும்.
திராட்சை
திராட்சைப் பழங்களைப் போல அதன் தோல்களும் ஆரோக்கியமான நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. மேலும், இதில் வைட்டமின் பி 6 ஊட்டச்சத்துக்கள் கொண்ட நல்ல மூலமாகும். இது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதுடன், மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
செர்ரிஸ்
செர்ரிகளில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய சிறந்த பழமாகும்.
ஆப்பிள்
ஆப்பிள் அனைவருக்கும் விருப்பமான பழமாகும். ஆப்பிள் பழத்தின் தோலுடன் கூடிய இனிப்பு-புளிப்பு வகைகள் தினசரி நார்ச்சத்து தேவைகளில் 20%-ஐ வழங்குகிறது. மேலும், குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கவும் ஆப்பிள் உதவுகிறது.
ப்ளம்ஸ்
ப்ளம்ஸ் பழங்கள் கிடைப்பது அரிதான ஒன்று. எனினும், உலர்ந்த நிலையில் உள்ள ப்ளம்ஸ் பழங்களை வாங்கிச் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளைப் பெற முடியும். ஆனால், உலர்ந்த பழங்கள் தண்ணீர்ச்சத்து இல்லாமல் செய்வதால், அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Vegan Diet: சர்க்கரை நோயாளிகள் தாவர அடிப்படையிலான உணவை உண்ணலாம்?
கிரேப் ஃப்ரூட்
கிரேப் ஃப்ரூட்டில் வைட்டமின் சி உள்ளது. இந்த பழத்தை உட்கொள்வது என்பது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து அமையும். எனவே கிரேப் ஃப்ரூட் எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
பீச் பழம்
பீச் பழம் 68 கலோரிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி உட்பட 10 வெவ்வேறு வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இதனை ப்ளூபெர்ரி உடன் கலந்து ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஆரஞ்சு பழத்தை விட ஸ்ட்ராபெர்ரியில் அதிக வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. எனவே இந்த பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்
Image Source: Freepik