Diabetes Effects: சர்க்கரை நோய் உங்கள் உடலின் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கும்?

  • SHARE
  • FOLLOW
Diabetes Effects: சர்க்கரை நோய் உங்கள் உடலின் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கும்?


ஃபரிதாபாத்தில் உள்ள மெட்ரோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் வித் மல்டி ஸ்பெஷாலிட்டியின் எண்டோகிரைனாலஜி மற்றும் டயபெட்டாலஜி இயக்குநர் டாக்டர் அருண் குமார் சி சிங் இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.

இதையும் படிங்க: இரவில் ஏற்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!

நீரிழிவு நோயால் உங்கள் உடலின் உறுப்புகளில் ஏற்படும் தாக்கங்கள்

நீரிழிவு உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு அமைப்பையும் பாதிக்கலாம். உறுப்பு ஈடுபாட்டின் அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதயம் மற்றும் இரத்த நாளங்கள்

வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் நீரிழிவு நோயின் படி, நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற இதய ஆபத்து காரணிகள் அதிகரிக்கலாம். இது பல இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயால் வரும் ஆபத்துக்களை பின்வருமாறு பார்க்கலாம்.

  1. நீரிழிவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
  2. உங்கள் உடலில் உள்ள உயர் இரத்த சர்க்கரை அளவுகள் உங்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் பெருந்தமனி தடிப்புக்கு வழிவகுக்கும்
  3. இது உயர் இரத்த அழுத்தத்திற்கும் பங்களிக்கும், இது தீவிரமான இதய நோயை ஏற்படுத்தும்.

சிறுநீரக பாதிப்பு

அமெரிக்கன் சொடைட்டி ஆஃப் நெப்ராலஜியின் மருத்துவ அறிக்கைப்படி, 40% நீரிழிவு நோயாளிகள் சிறுநீரக சர்க்கரை நோயை கொண்டுள்ளனர். இது உலகளவில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கிறது.

  1. சிறுநீரக நோய்க்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாகும்.
  2. இது சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுவதற்கான திறனையும் பாதிக்கிறது.
  3. காலப்போக்கில் இது சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும், டயாலிசிஸ் அல்லது மாற்று அறுவை சிகிச்சையின் தேவையை இது அதிகப்படுத்துகிறது.

கண்கள் பாதிப்பு

நீரிழிவு நோயானது கண்களின் ரெட்டினோவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக பார்வை பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனை கடுமையாகும் பட்சத்தில் கண்பார்வையே போகும் பாதிப்பும் ஏற்படலாம். எனவே, இந்தப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிர்வகிக்க வழக்கமான கண் பரிசோதனைகள் அவசியம்.

நரம்புகள்

உயர் இரத்த சர்க்கரை அளவு உடல் முழுவதும் நரம்புகளை சேதப்படுத்தும், நரம்பியல் நோயை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளாக கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் தசை பலவீனம் ஆகியவை அடங்கும். இந்த விளைவுகள் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களில் ஏற்படலாம். எனவே, நரம்பியல் நோயின் பாதிப்பை மெதுவாக்க சரியான இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிப்பது அவசியம்.

தோல் பராமரிப்பு

உங்கள் இதயம் மற்றும் நரம்புகளைத் தவிர, நீரிழிவு உங்கள் சருமத்தையும் பாதிக்கலாம். நீரிழிவு நோய் உங்கள் சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. காயங்கள் குணமடைய சற்று நேரம் எடுக்கும். தோல் நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை என்றாலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில் தோல் பராமரிப்பு மற்றும் வழக்கமான பரிசோதனை அவசியம்

கால் பாதங்களில் பிரச்சனை

நீரிழிவு நோயால் பாதங்களில் இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு சேதம் ஏற்படலாம். நீங்கள் கால் புண்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், வழக்கமான பாத பராமரிப்பு மற்றும் முறையான காலணிகள் அணிவது அவசியம்.

சர்க்கரை நோய் கண்காணிப்பு அவசியம்

நீரிழிவு உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளை பாதிக்கிறது, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம். இரத்தச் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உங்கள் சுகாதார வழங்குநரின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இதையும் படிங்க: Diabetes Diet: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 காலை உணவு விருப்பங்கள்

இவை அனைத்தும் உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெருமளவு உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Leafy Vegetables Benefits: சர்க்கரை நோயாளிகளுக்கு இலை காய்கறி எவ்வளவு நன்மை தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்