Doctor Verified

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய 7 பழங்கள் – டாக்டர் பால் பரிந்துரை!

சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம், எதை தவிர்க்கலாம் என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். டாக்டர் பால் கூறும் இந்த பழங்கள், சத்தும் தரும், இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும்.
  • SHARE
  • FOLLOW
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய 7 பழங்கள் – டாக்டர் பால் பரிந்துரை!


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் பழங்களை முற்றிலும் தவிர்க்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். காரணம், பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் (சர்க்கரை). ஆனால் உண்மையில், பழங்கள் நம்முடைய உடலுக்கு தேவையான நார்ச்சத்து, தண்ணீர், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் அனைத்தையும் வழங்கும் சக்திவாய்ந்த உணவுகள் என்கிறார் காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் பால் மாணிக்கம். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களை பட்டியலிட்டுள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்

கொய்யா

* அதிக நார்ச்சத்து

* குறைந்த சர்க்கரை

* வைட்டமின் C நிறைந்தது

* செரிமானத்துக்கும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும் உதவும்.

artical  - 2025-07-24T224656.917

பெர்ரிகள் (Blueberry, Strawberry, Raspberry)

* குறைந்த Glycemic Index

* ஆன்டி-ஆக்சிடென்ட் நிறைந்தது

* இதய ஆரோக்கியத்துக்கு உதவும்

பேரிக்காய்

* நார்சசத்து அதிகம்

* இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்

* நீண்ட நேரம் பசியை அடக்கி வைக்கும்

ஆப்பிள்

* நார்ச்சத்து + வைட்டமின் C

* குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

* இரத்த சர்க்கரை மெதுவாக உயர உதவும்

இந்த பதிவும் உதவலாம்: Diabetic diet chart: சர்க்கரை நோய் இருக்கா.? கவலை வேண்டாம்.. இந்த டயட் பிளான் உங்க வாழ்நாளையே மாற்றும்.!

பீச் பழம்

* குறைந்த சர்க்கரை

* வைட்டமின் C

* நார்ச்சத்து நிறைந்தது

* செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்

கிவி

* வைட்டமின் A, C நிறைந்தது

* மிதமான சர்க்கரை அளவு

* சருமம் மற்றும் மெட்டபாலிசம் ஆரோக்கியத்துக்கு உதவும்

மாதுளை

* ஆன்டி-ஆக்சிடென்ட் நிறைந்தது

* உடலில் உள்ள அலர்ஜியை குறைக்கும்

* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

டாக்டர் பால் வலியுறுத்தல்

“சர்க்கரை நோயாளிகள் பழங்களை வில்லன் போல் பார்க்கிறார்கள். ஆனால், பிரச்னை இது அல்ல. அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்” என்கிறார்.

Read Next

நீரிழிவு நோயால் உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுமா? மருத்துவர் என்ன சொல்கிறார்?

Disclaimer

குறிச்சொற்கள்