Doctor Verified

நீரிழிவு நோயால் உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுமா? மருத்துவர் என்ன சொல்கிறார்?

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது பல்வேறு வழிகளில் நரம்புகளைப் பாதிக்கக்கூடும். இந்த நிலையானது மருத்துவ ரீதியாக நீரிழிவு நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது. இதில் நீரிழிவு நோயானது நரம்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீரிழிவு நோயால் உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுமா? மருத்துவர் என்ன சொல்கிறார்?


இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு நோயும் அடங்குகிறது. பொதுவாக, நீரிழிவு நோயின் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே தான், நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் எதையும் சாப்பிடுவதற்கு அல்லது குடிப்பதற்கு முன்பு பல முறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரத்த சர்க்கரை ஏற்ற, இறக்கத்தினால் அவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

மேலும் நீரிழிவு என்பது உடலின் பல பாகங்களை பாதிக்கக்கூடிய ஒரு நோயாகும். நீரிழிவு நோயாளி நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நீரிழிவு காரணமாக உடலில் நரம்புகள் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது நரம்புகளை பல வழிகளில் பாதிக்கக்கூடும். இந்த நிலையானது மருத்துவ மொழியில் நீரிழிவு நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு நரம்பியல் நோயில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உடலின் நரம்புகள் கடுமையாக சேதமடையக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவலால் வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? மருத்துவர் தரும் விளக்கம் இதோ

இதில் நீரிழிவு நரம்புகளில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பது குரித்து காண்போம். அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு, நரம்பு மண்டலத்திற்கு சேதம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். நீரிழிவு நோயின் போது பல நேரங்களில் கூச்ச உணர்வு, பிடிப்புகள் மற்றும் கடுமையான வலியை உணரக்கூடும். இது குறித்த தகவல்களுக்கு, டெல்லியில் உள்ள அகர்வால் ஹோமியோபதி கிளினிக்கின் டாக்டர் பங்கஜ் அகர்வால் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நீரிழிவு நோயானது நரம்புகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

கைகள் மற்றும் கால்களில் வலி

உடலில் இரத்த சர்க்கரை அளவு தேவைக்கு அதிகமாக இருந்தால், கைகள் மற்றும் கால்களில் வலி ஏற்படக்கூடும். உண்மையில், நீரிழிவு நோய் அதிகரிக்கும் போது, தசைகள் பலவீனமடைகிறது. மேலும், இது கைகள் மற்றும் கால்களில் மட்டுமல்லாமல், உடலின் பிற பகுதிகளின் நரம்புகளிலும் வலியை ஏற்படுத்துகிறது.

இரத்த நாளங்கள் சேதமடைவது

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, சில சமயங்களில் இரத்த நாளங்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இரத்த நாளங்களும் சேதமடையக்கூடும். அது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் நரம்புகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் தடைபடும். மேலும் சில நேரங்களில், நரம்புகளில் ஏற்படும் மோசமான விளைவு காரணமாக, ஊட்டச்சத்துக்களும் உடலை அடைய முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, நரம்புகள் சேதமடையத் தொடங்குகிறது. இதைத் தவிர்க்க, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோய் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது ஏன் முக்கியம்?

நரம்பு பாதிப்பு

நரம்பு பாதிப்பு பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். நரம்பு பாதிப்பு உடலை பல வழிகளில் பாதிக்கிறது. எனவே, நரம்பு சேதத்தைத் தவிர்ப்பதற்கு, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல் அவசியமாகும். மேலும் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நரம்பு பாதிப்பு ஏற்பட்டால், சில சமயங்களில் உடலின் சில பகுதிகளில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், சில நேரங்களில் இந்த நிலை காரணமாக உணர்திறன் பாதிக்கப்படலாம். எனவே, நரம்பு பாதிப்பு ஏற்பட்டால், எந்த அலட்சியமும் இல்லாமல் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயில் நரம்புகள் சேதமடைவதை எவ்வாறு தடுப்பது?

  • நீரிழிவு நோயில் நரம்பு சேதத்தைத் தவிர்க்க, சிறந்த வாழ்க்கை முறையைப் பராமரிக்க வேண்டும்.
  • இதற்கு முதலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மேலும் நீரிழிவு அறிகுறிகள் தோன்றினால், நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
  • நீரிழிவு நோயில் நரம்பு சேதத்தைத் தடுப்பதற்கு, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த பிரச்சனைக்கு மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • நரம்பு பாதிப்பைத் தவிர்க்க, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் பச்சையாக மஞ்சள் சாப்பிடலாமா? நிபுணர் சொல்வதைக் கேளுங்க

Image Source: Freepik

Read Next

எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க இந்த ஸ்நாக்ஸ் நீங்க சாப்பிடலாம்.. நிபுணர் சொன்னது

Disclaimer