Expert

நீரிழிவு நோயாளிகள் பச்சையாக மஞ்சள் சாப்பிடலாமா? நிபுணர் சொல்வதைக் கேளுங்க

நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை மஞ்சள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது சில தீமைகளையும் தரலாம். இதில் நீரிழிவு நோயாளிகளின் சீரற்ற இரத்த சர்க்கரை அளவை கொண்டிருக்கும் போது பச்சை மஞ்சள் உட்கொள்வதால் என்ன விளைவுகளைத் தரும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீரிழிவு நோயாளிகள் பச்சையாக மஞ்சள் சாப்பிடலாமா? நிபுணர் சொல்வதைக் கேளுங்க


Is raw turmeric affect blood sugar level: நீரிழிவு நோய் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான நோயாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவுமுறையில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதாவது, இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதன் மூலம், நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

இதற்கு நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவின் ஒரு பகுதியாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், சமீப காலங்களில், மஞ்சள் நீரின் மந்திரத்தை அனைவரும் பார்த்திருப்பர். இது இன்ஸ்டாவில் பிரபலமான வீடியோவாகும். இது போன்ற சூழ்நிலையில், மஞ்சள் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதா, அதற்கு பதிலாக பச்சை மஞ்சளை உட்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடியதாகும். இந்தக் கேள்விகள் அனைத்தையும் மனதில் கொண்டு, நீரிழிவு நோயாளிகள் பச்சை மஞ்சளை உட்கொள்ளலாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

இது குறித்து திவ்யா காந்தியின் டயட் & நியூட்ரிஷன் கிளினிக்கின் உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: திடீரென இரத்த சர்க்கரை குறையறது சர்க்கரை லெவல் அதிகமாவதை விட ஆபத்தாம்.. எதனால் தெரியுமா?

நீரிழிவு நோய்க்கு பச்சை மஞ்சளை சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் பலர் மஞ்சள் பால் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதே சமயம், நீரிழிவு நோயில் பச்சை மஞ்சளை உட்கொள்வது பற்றி நிபுணர் கூறியுள்ளதாவது,”நீரிழிவு நோயில் பச்சை மஞ்சளை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் குர்குமின் என்ற ஒரு தனிமம் உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.” என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, “உண்மையில், குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோயில் மஞ்சள் நன்மை பயக்கும் என்றாலும், அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது புறக்கணிக்கக்கூடாத ஒன்றாகும். ஏனெனில், அதிக அளவு குர்குமின் அதாவது பச்சை மஞ்சள் உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயில் பச்சை மஞ்சள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை சமநிலை

பச்சை மஞ்சளில் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும் பல்வேறு கூறுகள் உள்ளன. இந்நிலையில், குறைந்த அளவில் பச்சை மஞ்சளை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இது செரிமான திறனை மேம்படுத்துகிறது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது

இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு

நிபுணர்களின் கூற்றுப்படி, பச்சை மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையைக் குறைத்து இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சர்றென எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க நிபுணர் சொன்ன இந்த டயட் டிப்ஸை தினமும் ஃபாலோ பண்ணுங்க

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கு

நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள் அமைகிறது. இதன் காரணமாக அவர்கள் இன்சுலின் உணர்திறனை எதிர்கொள்கின்றனர். அதே போல, பச்சை மஞ்சளில் உள்ள குர்குமின், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலமும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் ஒரு கலவை ஆகும். எனவே இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கு இந்த காரணிகள் அனைத்தும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

நீரிழிவு நோயில் பச்சை மஞ்சளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நீரிழிவு நோய்க்கு பச்சை மஞ்சளை சாப்பிடுவதில் எந்த சிறப்புத் தீங்கு விளைவுகளும் இல்லை. ஆனால், அதிகளவு பச்சை மஞ்சள் உட்கொள்ளல், சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதில் சிலவற்றைக் காண்போம்.

  • பச்சை மஞ்சளுக்கு ஒவ்வாமை இருப்பின், அதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
  • பச்சை மஞ்சள் உட்கொள்வது வயிற்று உபாதையை ஏற்படுத்தக்கூடும். சில ஆய்வுகளில், பச்சையாக மஞ்சளை அதிக அளவில் சாப்பிடுவது வாந்தி, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • பச்சை மஞ்சளை அதிகமாக சாப்பிடுவது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
  • நீண்ட காலமாக ஏதேனும் மருந்தை உட்கொண்டால், உணவில் பச்சை மஞ்சளைச் சேர்ப்பதற்கு முன்பு ஒரு நிபுணரை அணுக வேண்டும். அதிக அளவு பச்சை மஞ்சளை உட்கொள்வது, எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விளைவைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • பச்சை மஞ்சள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில், இரத்தச் சர்க்கரைக் குறைபாட்டிற்கு மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு பச்சை மஞ்சள் தீங்கு விளைவிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Powder Or Raw Turmeric: மஞ்சள் தூளை விட பச்சை மஞ்சள் சிறந்ததா? எதை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

Image Source: Freepik

Read Next

Coffee குடிச்சா.. Sugar அதிகமாகுமா.? Doctor சொல்றது என்ன.?

Disclaimer