திடீரென இரத்த சர்க்கரை குறையறது சர்க்கரை லெவல் அதிகமாவதை விட ஆபத்தாம்.. எதனால் தெரியுமா?

நீரிழிவுநோயாளிகளுக்கு சர்க்கரை அளவு திடீரெனக் குறைந்தால், அதாவது உடலில் சர்க்கரை அளவு இயல்பை விடக் குறைவாக இருந்தால், அது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இது இயல்பாக இரத்த சர்க்கரை அதிகரிப்பை விட அதிகமாகக் கருதப்படுகிறது. இது குறித்து இதில் விரிவாகக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
திடீரென இரத்த சர்க்கரை குறையறது சர்க்கரை லெவல் அதிகமாவதை விட ஆபத்தாம்.. எதனால் தெரியுமா?


Sudden drop in sugar levels in diabetics: உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நாள்பட்ட நோயாக விளங்கும் நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரை ஏற்றம் மற்றும் இரத்த சர்க்கரை குறைவு பிரச்சனை அவ்வப்போது நடக்கக்கூடிய விஷயங்களாகும். எனவே தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.

குறைந்த மற்றும் அதிகரிக்கும் இரத்தச் சர்க்கரை

சில நேரங்களில், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு திடீரென குறையத் தொடங்குகிறது. இது அவர்களுக்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். உடலில் இரத்த சர்க்கரை அளவு நீண்ட நேரம் குறைவாக இருக்கும் போது, மூளை குளுக்கோஸைப் பெற முடியாமல் போகலாம். இதனால் நோயாளி சுயநினைவை இழக்கும் சூழ்நிலை உண்டாகலாம். சில சமயங்களில் இந்த நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறக்கூடும். இந்நிலையில், நோயாளி கோமா நிலைக்குச் செல்வர் அல்லது அவர்கள் இறக்கும் அபாயமும் ஏற்படலாம்.

அதிகப்படியான உடல் உழைப்பு, ஒழுங்கற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் இந்த பிரச்சனை அதிகரிக்கலாம். உடலில் இரத்த சர்க்கரை அளவு 70 மி.கி/டெ.லி அல்லது அதற்கும் குறைவாகக் குறையும் போது, அது இரத்தச் சர்க்கரைக் குறைவு என அழைக்கப்படுகிறது. இவை இரத்த சர்க்கரை குறைவு அல்லது குறைந்த இரத்தச் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி கை, கால்களில் நடுக்கம் வருதா? லேசுல விடாதீங்க.. அதுக்கு இந்த பிரச்சனை கூட காரணமா இருக்கலாம்

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், நோயாளிகளுக்கு பல்வேறு அறிகுறிகள் தோன்றுகிறது. அதன் படி, வியர்வை, சோர்வு, தலைவலி, அமைதியின்மை, அதிகப்படியான பசி மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கலாம். உடலில் இரத்த சர்க்கரை குறையும் போது இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக சர்க்கரை அளவை சரிபார்ப்பது அவசியமாகும்.

இரத்தச் சர்க்கரைக் குறைவு

நீரிழிவு சிகிச்சையை மேற்கொள்ளும்போது மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக, இரத்தச் சர்க்கரைக் குறைவு அபாயத்தைக் குறைக்கிறது. இரத்த சர்க்கரை குறைவின் அபாயத்தைக் குறைப்பதற்கு இரத்த சர்க்கரை அளவு டெசிலிட்டருக்கு 100 முதல் 110 மில்லிகிராம் வரையிலும், உணவுக்குப் பிந்தைய அளவு டெசிலிட்டருக்கு 140 முதல் 180 மில்லிகிராம் வரையிலும் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இரத்த சர்க்கரை குறைவை விட அதிகம் ஏன் ஆபத்தானது?

நிபுணர்களின் கூற்றுப்படி, திடீரென குறைந்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை விட ஆபத்தானவையாகக் கருதப்படுகிறது. எனவே சர்க்கரை அளவு குறைந்தால், மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட காலமாக, மூளைக்கு வழங்கப்படும் குளுக்கோஸ் போதுமானதாக இல்லாவிட்டால், ஒரு நபர் நிரந்தர மூளை பாதிப்பை சந்திக்கலாம். குறிப்பாக, சர்க்கரை குறைவாக இருந்து தலைச்சுற்றல் ஏற்படுவது, திடீரென மயங்கி விழும் போது அதனால் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு பிரச்சனைகள், தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் போன்றவை பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். எனவே தான் திடீர் அதிகரிப்பை விட, இரத்த சர்க்கரை அளவு திடீரென குறைவது ஒரு பிரச்சனையாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Low Blood Sugar: இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் தலை சுற்றல் வருமா?

இரத்தச் சர்க்கரைக் குறைவின் காரணங்கள்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை குறைவிற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

உண்ணாவிரதம் - ஒருவர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும், அது இரத்த சர்க்கரை குறைவுக்கு வழிவகுக்கலாம்.

அதிகப்படியான மது அருந்துதல் - வெறும் வயிற்றில் அதிக அளவு மது அருந்துவது கல்லீரலில் சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது. இது இரத்த சர்க்கரை குறைவில் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

ஹார்மோன் குறைபாடு - உடலில் ஹார்மோன் அளவு குறைபாட்டின் காரணமாகவும், இரத்தச் சர்க்கரைக் குறைவு நிலை ஏற்படலாம்.

இரத்தச் சர்க்கரை குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

  • சோர்வு
  • நடுக்கம்
  • திடீரென பதட்டம் ஏற்படுதல்
  • அதிகரித்த பசியின்மை
  • மங்கலான பார்வை
  • வியர்வை மற்றும் கடுமையான குளிர்
  • நடத்தையில் மாற்றங்கள்
  • இதயத் துடிப்பில் ஏற்ற இறக்கங்கள்
  • இரத்தச் சர்க்கரைக் குறைவிற்கான சிகிச்சை முறைகள்

இதற்கு இரண்டு சிகிச்சை வழிகள் உள்ளன. முதலாவதாக, இரத்த சர்க்கரையை உயர்த்துவதற்கான உடனடி ஆரம்ப சிகிச்சை ஆகும். அடுத்ததாக, இருக்கும் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பதைக் குறிக்கிறது.

இந்த நோயின் ஆரம்ப சிகிச்சையானது அதன் அறிகுறிகளைப் பொறுத்ததாகும். இதில் ஆரம்ப அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த அதாவது உடலில் எளிதில் சர்க்கரையாக மாற்றப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, இரத்த சர்க்கரையை மீண்டும் சரிபார்க்கவும். இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை எனில், அதே படிகளை மீண்டும் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், அதைப் பராமரிக்க சிற்றுண்டிகள் அல்லது உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். மேலும் இரத்த சர்க்கரை குறைவின் அறிகுறிகள் கடுமையாக இருக்கும்போது, வாய்வழி சர்க்கரை உட்கொள்வது அதிக நன்மை தராது. இந்நிலையில், உடலுக்கு நரம்பு வழியாக குளுக்கோஸ் ஊசி தேவைப்படலாம். இது போன்ற கடுமையான காரணங்களை நிவர்த்தி செய்ய சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: உறங்கும் போது இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் என்ன நடக்கும்?

Image Source: Freepik

Read Next

நீரிழிவு நோயாளிகள் முருங்கை சாப்பிடலாமா? அப்படினா இந்த விளைவுகளையும் சந்திக்க தயாராகிக்கோங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version