எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க இந்த உணவுப் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க

Food habits to control blood sugar: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப்பொருள்களில் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும் நிலை ஏற்படும். எனவே தான் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய சில ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். இதில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில உணவுப்பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க இந்த உணவுப் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க

Food habits to reduce sugar level: இன்றைய நவீன காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு நோயும் அடங்கும். ஆம். உண்மையில் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவானா நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவுமுறை அமைகிறது. புள்ளிவிவரங்களின் படி, 2021 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் பெரியவர்களிடையே 774,194,700 நீரிழிவு நோயாளிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் வயது வந்தோர் மக்கள்தொகையில் 8.3% ஆகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், உலகிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா கருதப்படுவதற்கான காரணம் உணவுமுறையே ஆகும். நீரிழிவு நோய் முற்றிலுமாக ஒழிக்க முடியாததாகும். எனினும், நல்ல வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு முறை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். எனவே தான் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமாகும்.

உடலில் அதிகரித்து வரும் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் நல்வாழ்வு ஆலோசகர் மீனாட்சி பட்டுகலா அவர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Food: சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பிரெட் எது?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது

அன்றாட உணவில் சேர்க்க முழு தானியங்கள் மற்றும் பாலிஷ் செய்யப்படாத கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். சத்தான உணவு விருப்பங்களின் மூலம் மட்டுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வழியில் உணவை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரையை நன்றாக சமநிலைப்படுத்த உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுப்பது

நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் உணர்திறன் இருப்பின், அவர்கள் அதிக இனிப்பு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, அவர்கள் மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, லிச்சி மற்றும் சப்போட்டா போன்ற பழங்களின் நுகர்வைக் குறைக்க வேண்டும். இதில் இருக்கக் கூடிய கிளைசெமிக் குறியீட்டின் அளவு அதிகமாகும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் உட்கொள்ள கூடாது

ஒருபோதும் தனியாக கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் சாப்பிடக்கூடாது. இந்த சூழ்நிலையில், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை புரதங்கள் மற்றும் கொழுப்புகளுடன் இணைத்து சாப்பிட வேண்டும். இந்த வழியில் நமது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, பழங்களை எடுத்துக் கொள்பவராக இருந்தால், அவற்றுடன் நட் வெண்ணெய் மற்றும் விதைகளைச் சேர்த்து சாப்பிடலாம். அதே சமயம், முட்டைகளை சாப்பிடுபவராக இருப்பின், அவற்றை ஹம்முஸ் மற்றும் வெண்ணெய் பழத்துடன் சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் வராம இருக்க இந்த உணவுகளுக்கு பதில் நீங்க எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் எது தெரியுமா?

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை இல்லாத பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது

நீரிழிவு அல்லது இரத்த சர்க்கரை பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு, உணவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நீக்க வேண்டும். இதனுடன் ஆரோக்கியமாகத் தோன்றக்கூடிய சர்க்கரை இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இந்நிலையில், உணவைத் தேர்ந்தெடுக்கும்போது அன்றாட உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

சீரான காலை உணவை சாப்பிடுவது

எப்போதும் ஒரு சீரான உணவை உட்கொள்வது அவசியமாகும். அதன் படி, புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இந்த வழியில் உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதையும் கொழுப்பு அதிகரிப்பையும் தவிர்க்க வேண்டும். சீரான காலை உணவை உட்கொள்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் மட்டுமே நீரிழிவு நோய் வருமா?

அதிகளவு சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று பலர் இன்னும் நம்புகின்றனர். எனினும், இது முற்றிலும் உண்மை இல்லை. உண்மையில், அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படலாம். ஆனால், இது மட்டுமே நீரிழிவு நோய்க்கான காரணம் அல்ல. ஆம். உணவுமுறை, வாழ்க்கை முறை, மரபியல், வயது, எடை மற்றும் உடல் செயல்பாடுகளாலும் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால், மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். இது நீரிழிவு மட்டுமல்லாமல் பல சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கலாம். மேலும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால்.. காலை உணவாக ராகி இட்லி சாப்பிடுங்கள்.. உங்களுக்கு முழு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.!

Image Source: Freepik

Read Next

நீரழிவு நோயாளிகள் இயற்கையாக சர்க்கரையை கட்டுப்படுத்த தினமும் இந்த ஒரு டீயைக் குடித்தால் போதும்...!

Disclaimer