Home remedies to control blood sugar: இன்றைய நவீன காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக, இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனினும் பலர் இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேடுகின்றனர். இதற்கு மருத்துவரிடம் சென்று பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மத்தியில் இயற்கையாகவே சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் சில வழிகள் உள்ளன. இதற்கு கடுமையான உணவு மற்றும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக நாம் தவிர்க்க முடியாத ஏக்கத்துடன் பல நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எப்போதாவது ஒரு முறை உணவில் ஈடுபடுவது சரி. ஆனால், மிதமானது முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு ஏராளமான இயற்கை வைத்தியங்கள் உள்ளன. எனினும் வழக்கத்தில் புதிதாக எதையும் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் நல்லது. ஆனால் இயற்கையாகவே நீரிழிவு நோயை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் நீரிழிவு நோய் குறித்த விவரங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கணுமா? அப்ப நீங்க மறந்தும் இந்த ட்ரிங்ஸை குடிக்காதீங்க
நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும் ஒரு நிலையைக் குறிப்பதாகும். கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உங்கள் உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காதபோது இது நிகழக்கூடியதாகும்.
டைப்-1 நீரிழிவு நோய்
உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலையே டைப்-1 நீரிழிவு நோய் எனப்படுகிறது. இது இது பொதுவாக குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ தோன்றக்கூடியதாகும். ஆனால், இது எந்த வயதிலும் உருவாகக் கூடியவை.
டைப்-2 நீரிழிவு நோய்
இது மிகவும் பொதுவான வகையாகும். இது உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காத போது ஏற்படுகிறது. உண்மையில் அனைத்து நீரிழிவு நோயாளிகளில் சுமார் 90% இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
கர்ப்பகால நீரிழிவு நோய்
இது பெண்களின் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடியதாகும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நீரிழிவு நோய் அவர்களை பாதிக்கிறது.
நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்துவது எப்படி?
ஆரோக்கியமான உணவு பராமரிப்பு
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது அடங்கும். ஏனெனில், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக உடைந்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே, கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும், போதுமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். குறிப்பாக, கரையக்கூடிய உணவு நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ப்ரீ டயாபடீஸை ரிவர்ஸ் செய்ய நீங்க தினமும் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள் இங்கே
போதுமான தண்ணீர் குடிப்பது
நீரிழிவு நோயை இயற்கையாக எப்படி கட்டுப்படுத்த உதவும் எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக தண்ணீர் குடிப்பது அடங்கும். ஏனெனில் நீரேற்றமாக இருப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என ஆய்வுகளில் கூறப்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரிழப்பைத் தடுக்கவும், சிறுநீரகங்கள் சிறுநீர் வழியாக நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. கூடுதலாக, நீரேற்றமாக இருப்பது இரத்தத்தை மீண்டும் நீரேற்றம் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்கிறது.
போதுமான தூக்கம் பெறுவது
மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குக் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியமாகும். மோசமான தூக்கம் ஆனது இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். மேலும், இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம். சீரான தூக்க வழக்கத்தை பராமரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதுடன், ஆரோக்கியமான எடையை ஆதரிக்கவும் முடியும்.
மன அழுத்த நிலைகளை நிர்வகிப்பது
மன அழுத்தத்தின் காரணமாக, நீரிழிவு நோயை நிர்வகிப்பதி சிரமம் உண்டாகலாம். மன அழுத்தத்தில் இருக்கும்போது, குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே மன அழுத்தத்தை நிர்வகிக்க, நிபுணர்கள் வழக்கமான உடற்பயிற்சி அல்லது தியானம் மேற்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயை இயற்கையாகவே நிர்வகிக்க உதவும் இந்த வைத்தியங்களை முயற்சிக்கலாம். எனினும், எந்த மாற்றங்களையும் செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Symptoms: வாய் துர்நாற்றம் நீரிழிவு நோயின் அறிகுறியா? இது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
Image Source: Freepik