How to prevent diabetic eye problems: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக நீரிழிவு நோயும் அடங்கும். நீரிழிவு நோய் காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அந்த வகையில், சர்க்கரை நோயினால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நீரிழிவு கண் நோய் என்பது நீரிழிவு ரெட்டினோபதி போன்ற நிலைமைகளை உள்ளடக்கியதாகும்.
இதில் உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக, கண்ணின் இரத்த நாளங்கள் சேதப்படுத்தப்படுகிறது. இந்த உயர் இரத்த சர்க்கரை அளவு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வைக் குறைபாடு மற்றும் குருட்டுத் தன்மைக்கு வழிவகுக்கலாம். கண்புரை மற்றும் கிளௌகோமா போன்ற பிற நிலைமைகளுக்கு நீரிழிவு நோய் பொதுவான காரணியாக அமைகிறது. அதிலும் ஆரம்ப காலகட்டங்களில், இதன் அறிகுறிகள் தெரியாமல் போகலாம். எனவே, வழக்கமான கண் பரிசோதனைகள் மிகவும் முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Drinking Hot Water: சூடு தண்ணீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு குறையுமா? உண்மை இங்கே!
நீரிழிவு கண் நோய் அபாயங்கள்
ஆரம்ப காலகட்டத்தில், நீரிழிவு கண் நோய் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஆனால், காலப்போக்கில் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் காரணமாக மங்கலான பார்வை ஏற்படலாம். மேலும், இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் அதிகளவு இருப்பது, கண்ணின் இரத்த நாளங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், வீக்கம், கசிவு மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து, கடுமையான சந்தர்ப்பங்களில் அசாதாரண இரத்த நாளங்கள் கண்ணின் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய் அபாயத்தில் கண் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் முறைகள்
நீரிழிவு நோயின் போது ஏற்படும் லேசான முதல் கடுமையான வரையிலான கண் பாதிப்புகளைக் குறைக்க, கண் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது அவசியமாகும்.
இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது
நீரிழிவு கண் நோயைத் தடுப்பதற்கு இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அளவுகள் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தலாம். மேலும், வீக்கம் மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இது பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.
வழக்கமான கண் பரிசோதனைகள்
ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளுமின்றி, நீரிழிவு கண் நோய் அடிக்கடி உருவாகலாம். இந்நிலையில், ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்வது அவசியமாகும். அதன் படி, வழக்கமான ஸ்கிரீனிங் மூலம் மாகுலர் எடிமா மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி போன்ற சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது. இவை குறிப்பிடத்தக்க பார்வை இழப்புக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Eye Care: சர்க்கரை நோயாளிகளே கண்கள் பத்திரம்! இதை கட்டாயம் செய்யனும்!
ஆரோக்கியமான கொழுப்பைப் பராமரிப்பது
விழித்திரை இரத்த நாளங்களில் கொழுப்பு படியும் நிலையானது அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவுகள் இருப்பதே காரணமாகும். இது நீரிழிவு கண் சிக்கல்களை மேலும் மோசமாக்குகிறது. இந்நிலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சீரான உணவைப் பின்பற்றுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலை உகந்த அளவில் வைத்திருக்க உதவுகிறது. இவை கண் ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது
உயர் இரத்த அழுத்தம் இருப்பது இரத்த நாளங்களில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், நீரிழிவு விழித்திரை நோய் மோசமடைவதுடன் சேதம் அடையலாம். எனவே இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கட்டுப்படுத்தப்பட்ட இரத்த அழுத்தம் கண் நோயின் வளர்ச்சியைக் குறைப்பதுடன், பார்வையிழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எடை கட்டுப்பாடு
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது. இவை இரத்த குளுக்கோஸை வரம்பிற்குள் வைத்திருப்பதை எளிதாக்குகிறது. அதிக எடையானது நீரிழிவு ரெட்டினோபதி போன்ற சிக்கல்களின் வாய்ப்பை அதிகரிக்கிறது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். அதேசமயம் சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் எடை மேலாண்மையை ஆதரிக்கலாம். இதன் மூலம் கண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறு நீரிழிவு நோய் அபாயத்தினால் ஏற்படும் கண் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eyes rubbing causes: கண்களை அடிக்கடி தேய்ப்பவர்களா நீங்க? முதலில் இத கவனிங்க
Image Source: Freepik