உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நீரிழிவு நோய்! எப்படி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நீரிழிவு நோய்! எப்படி தெரியுமா?

ஆம். நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயைக் கவனிப்பதுடன், அவர்களின் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உடல் மற்றும் உணவு முறையில் எந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனரோ அதே அளவு அக்கறை மன ஆரோக்கியத்திலும் இருக்க வேண்டும். ஏனெனில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நிலை ஏற்படலாம். மேலும் இந்த காரணிகள் நீரிழிவு நோயை மேலும் மோசமடையலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Peel Tea: மாம்பழ தோல் டீ குடித்தால் சர்க்கரை அளவு ஏறுமா? குறையுமா?

நீரிழிவு நோய் மற்றும் மனநலத்திற்கான தொடர்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் வேறு பல சுகாதார நிலைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது. அவ்வாறு கண்கள், நரம்புகள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் என பல்வேறு உடலுறுப்புகள் பாதிக்கப்படலாம். இது சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாகும். இதில் நாம் கவனம் செலுத்துவதை மறந்து விடுவது நம் மன ஆரோக்கியத்தைத் தான்.

எந்தவொரு நாள்பட்ட நோய் அல்லது நிலையானது பல தீவிர பிரச்சனைகளை உள்ளடக்கியதாக அமைகிறது. இதில் நீரிழிவு நோயானது பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும். எந்தவொரு நிலைமையையும் நிர்வகிக்க உடல், உணர்ச்சி தேவைகள் போன்ற சாத்தியக்கூறுகள் ஒரு நபரின் மனநலனைப் பாதிக்கலாம்.

பொதுவாக டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாகலாம். அதிலும் சாதாரண மக்களில், நீரிழிவு நோயின் காரணமாக மன அழுத்தத்தின் ஆபத்து இரண்டு மடங்கு வரை அதிகரிக்கிறது. டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம். சாதாரண மக்களில், நீரிழிவு நோயின் காரணமாக மன அழுத்தத்தின் ஆபத்து 2 மடங்கு வரை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயினால் மன அழுத்தம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டநபர்கள் தங்கள் நோயைப் பற்றி எப்போது கவலைப்படுகின்றனர். இதுவே அவர்களுக்கு மன அழுத்தமாக மாறுகிறது. இதில் ஐந்தில் இருவர் தங்கள் நோய் காரணமாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Jamun Juice For Diabetes: எகிறும் சுகர் லெவலை அசால்ட்டாகக் குறைக்கும் மந்திர பானம்!

இதில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம். எனவே இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நாள்பட்ட நீரிழிவு நோய் ஒரு தனிநபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிப்பது குறித்த நிலையான எரிச்சல், கவலை, அதிக எரிச்சல் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளிகளின் மனநலத்தை பராமரிப்பது எப்படி?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மன ஆரோக்கிய கவலைகளைத் தவிர்ப்பதற்கு ஆரம்ப கால நோயறிதல் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், இந்த ஆரம்ப கால நோயறிதலின் உதவியுடன் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தலாம். நீரிழிவு மற்றும் மன அழுத்தம் இரண்டையும் எளிதில் சமாளிக்கலாம்.

இதற்கு முதலில் நீரிழிவு மருத்துவரை அணுகி மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தவிர, அதிக மன அழுத்தத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டால் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. இவை நீரிழிவு மற்றும் மன அழுத்தம் இரண்டையும் சமாளிப்பதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Lassi for Diabetes: சர்க்கரை நோயாளிகள் லஸ்ஸி சாப்பிட போறீங்களா? அப்ப இத முதல்ல பாருங்க

Image Source: Freepik

Read Next

Diabetes Care: வகை 1 நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இதை செய்யாதீர்கள்.!

Disclaimer