How Does Stress Affect Blood Sugar: நவீன கால வாழ்க்கை முறையில் பலரும் மன அழுத்தம், பதட்டம் போன்ற உணர்வுகளை அனுபவித்து வருகின்றனர். வேலைப்பளு மற்றும் வேறு சில காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தத்தைச் சரியாக கையாள்வதன் மூலமே குணப்படுத்த முடியும். ஆனால் இது எதிர்மறையாக மாறும் போது மன அழுத்தம் அதிகமாகலாம்.
இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் மன அழுத்தத்தினால் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படலாம். இதில் மன அழுத்தத்தால் நீரிழிவு நோயின் தாக்கம் மற்றும் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Morning Drinks: சர்க்கரை டக்குனு குறையணுமா? வெறும் வயிற்றில் இதெல்லாம் குடிங்க
மன அழுத்தத்தால் சர்க்கரை அளவு எவ்வாறு அதிகரிக்கிறது?
மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இது பல்வேறு வழிகளில் மக்களை பாதிக்கலாம். ஹெல்த்லைன் இணையத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், “மன அழுத்தத்தில் இருக்கும் போது உடல் எதிர்வினையாற்றலாம். இந்த நேரத்தில் அட்ரினலின், கார்டிசோல் போன்றவை உடலில் வெளியிடப்படுகிறது. இது சுவாசத்தின் வேகத்தை அதிகரிக்கிறது.
உடலால் முடியவில்லை எனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடலாம். அதே சமயம், ஒருவர் டைப் 2 சர்க்கரை நோயாளியாக இருப்பின், அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இவ்வாறு மன அழுத்தம் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுவதைக் காணலாம். அது மட்டுமின்றி, உடல் உளைச்சல் அல்லது உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்
பல நேரங்களில் பலருக்கும் ஏற்படும் கடுமையான மன அழுத்தத்தின் அறிகுறிகள் கண்டறியப்படுவதில்லை. அதேசமயம், மன அழுத்தம் ஏற்படுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். இதன் அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.
- தலைவலி
- தூக்கமின்மை
- உடல் சோர்வு
- தசைவலி
- அடிக்கடி காய்ச்சல்
இந்த பதிவும் உதவலாம்: Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?
மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்
- மன அழுத்தத்தைக் குறைக்க, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாகும்.
- மன அழுத்தத்தைக் குறைக்க யோகா உதவுகிறது.
- மனதில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க தியானம் சிறந்த வழியாகும்.
- ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தினந்தோறும் நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும்.
சர்க்கரை நோய் தொடர்பான மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?
- நீரிழிவு நோயாளிகள் அவர்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும். இது அவர்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதில் அவர்களிடமிருந்து மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தம் முற்றிலும் நல்லதன்று. நெருக்கமான ஒருவரிடமிருந்து உதவி பெற இயலாவிட்டால், நிபுணரை சந்திப்பது நல்லது. இதன் மூலம் சிக்கலிலிருந்து வெளியேறலாம்.
- இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள், மன அழுத்தத்தைக் குறைக்க ஆன்லைன் குழுக்களை அணுகலாம். இதில், பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Foods For Diabetes: பாடாய்ப் படுத்தும் சுகர் லெவலை சட்டென குறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
Image Source: Freepik