$
Diabetes Food List To Eat: நீரிழிவு நோய் என்பது இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதுடன் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கையாள வேண்டும். அதன் படி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்
உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நீரிழிவு நோய்க்கு மிகுந்த பயனளிக்கும். மேலும் இது நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆளி விதைகள்
ஆளி விதைகள் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடும் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வெந்தய விதைகள்
இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்களும் மற்ற பிற ஆரோக்கிய கூறுகளும் நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக வைக்க உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இயல்பு நிலையில் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Morning Drinks: சர்க்கரை டக்குனு குறையணுமா? வெறும் வயிற்றில் இதெல்லாம் குடிங்க
பச்சைக் காய்கறிகள்
இந்த காய்கறிகளில் மக்னீசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
பாகற்காய்
பாகற்காய் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த காய்கறி ஆகும். இதில் பாலிபெப்டைட்-பி நிறைந்துள்ளது. இவை இன்சுலின் போன்ற இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் புரதமாகும். இது உடலுக்கு ஆற்றலை அளிக்க செல்களுக்கு குளுக்கோஸை கொண்டு வர உதவும் புரதமாகும். நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் பாகற்காய் சாறு அருந்துவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை
இதில் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இதை டீ போலத் தயார் செய்து அருந்தலாம் அல்லது வெந்நீரில் இலவங்கப்படையைச் சேர்த்து உட்கொள்ளலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சுரைக்காய்
சுரைக்காய் 92% தண்ணீர் மற்றும் 8% நார்ச்சத்துக்கள் கொண்ட சிறந்த காய்கறியாகும். இதில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை தொடர்பான கூறுகளின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும்.
நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Black Seed For Diabetes: சர்க்கரை அளவு டக்குனு குறைய உதவும் கருஞ்சீரகம். இப்படி எடுத்துக்கோங்க போதும்
Image Source: Freepik