Winter Diabetes Tips: குளிர்காலத்தில் எகிறும் சர்க்கரை லெவலை டக்குனு குறைக்க இத தினமும் செய்யுங்க

How can i control my sugar in the winter: குளிர்காலத்தில் நீரிழிவு நோயை நிர்வகிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் வெப்பநிலை மாற்றங்கள், செயல்பாட்டு நிலைகள் மற்றும் உணவில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படலாம். இந்நிலையில், குளிர்ந்த காலநிலையில் நீரிழிவு நோயை நிர்வகிக்க பயனுள்ள உத்திகளைக் கடைபிடிப்பது அவசியமாகும். இதில் குளிர்கால மாதங்களில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில பயனுள்ள குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Winter Diabetes Tips: குளிர்காலத்தில் எகிறும் சர்க்கரை லெவலை டக்குனு குறைக்க இத தினமும் செய்யுங்க

How do you handle diabetes in cold weather: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு நோயும் அடங்கும். நீரிழிவு நோய் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருமே சந்திக்கும் ஒரு பொதுவான நோயாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பது அவசியமாகும். குறிப்பாக குளிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள், உணவுமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம்.

குளிர்ந்த காலநிலையில் நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு குறிப்பாக உணவில் ஏற்படும் மாற்றங்கள், வெப்பநிலை மாற்றங்கள், செயல்பாட்டு நிலைகள் போன்றவை சவாலாக இருப்பதமாக அமைகிறது. குளிர் காலநிலை காரணமாக இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் இன்சுலின் உணர்திறன் போன்றவற்றைப் பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயை நிர்வகிக்க பயனுள்ள உத்திகளைக் கடைபிடிக்க வேண்டும். குளிர்ந்த காலநிலையில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த சில பயனுள்ள வழிகாட்டிகளைக் கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகளே சாப்பிட்டு முடிச்சதும் இதைச் செய்தால்... சர்க்கரை அளவு அதிகரிக்காது!

குளிர்ந்த காலநிலையில் நீரிழிவு நோயை நிர்வகிக்கும் முறை

சமச்சீரான உணவைப் பராமரிப்பது

குளிர்காலத்தில் பெரும்பாலும் அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளையே அதிகம் விரும்புவர். எனவே பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை உள்ளடக்கிய சீரான உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை தின்பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கலாம்.

இன்சுலின் அளவை சரி செய்வது

குளிர்ந்த காலநிலையில் சில நபர்கள் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை சந்திக்கலாம். இந்நிலையில், உடலில் இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்க இன்சுலின் விதிமுறைகளில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து சுகாதார வல்லுநரை அணுகி ஆலோசனை பெறலாம். குளிர்காலத்தில் உடல் செயல்பாடு குறைதல் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகள் உடல் இன்சுலினுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பாதிக்கலாம். எனவே உடல்நலக் குழுவுடன் வழக்கமான தொடர்பு வைத்து கண்காணிப்பது இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது

சூடாக, நீரேற்றமாக இருப்பது

குளிர் காலநிலையின் போது நீரிழப்பு ஏற்படுவது பொதுவானதாகக் கருதப்படுகிறது. இது இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கக் கூடியதாகும். எனவே, குளிர்ந்த காலநிலையில் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வெளியில் செல்லும் போது சூடாக ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், தீவிர வெப்பநிலை உடல் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். சூடாக இருப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Management: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்..

இரத்த குளுக்கோஸைத் தவறாமல் கண்காணிப்பது

ஒருவர் இரத்த குளுக்கோஸ் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாகும். அதிலும் குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் உள்ள வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக இன்சுலின் உணர்திறன் பாதிக்கப்படலாம். எனவே குளிர் காலத்தின் போது, குறிப்பாக உணவு அல்லது செயல்பாட்டு நிலைகளில் மாற்றங்களுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். இது இன்சுலின் அளவை அதற்கேற்ப சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சுறுசுறுப்பாக இருப்பது

நீரிழிவு நோயை நிர்வகிக்க உடல் செயல்பாடு மிகவும் அவசியமாகும். குறிப்பாக, குளிர்காலத்தில் மக்கள் பலரும் உடற்பயிற்சி செய்வதில் உள்ள ஆர்வத்தை குறைவாகக் காட்டுகின்றனர். இது அவர்களை மேலும் சோர்வு நிலைக்குக் கொண்டு வருகிறது. குறைந்த உடல் செயல்பாடு காரணமாக இன்சுலின் அளவு பாதிக்கப்படலாம். எனவே யோகா, தியானம், ஸ்கிப்பிங் போன்ற வெப்பநிலை வீழ்ச்சிக்கு மத்தியில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

குளிர்காலத்தில் சில நேரங்களில் தனிமை அல்லது பருவகால பாதிப்புக் கோளாறு போன்ற உணர்வுகளை பலரும் சந்திப்பர். இது நீரிழிவு நிர்வாகத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். இந்நிலையில், மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது, ஆரோக்கியமான சமூக வாழ்க்கையைப் பேணுவது போன்றவற்றின் மூலம் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தலாம். இது பயனுள்ள நீரிழிவு மேலாண்மைக்கு முக்கியமானதாகும்.

குளிர்காலத்தில் இது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயங்களைச் செய்யக்கூடாது..

Image Source: Freepik

Read Next

Diabetes Management: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்..

Disclaimer