What Foods Good For Diabetics: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீரிழிவு நோயால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை நீண்ட காலமாக அவர்கள் உணரவில்லை. குறிப்பாக தவறான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழக்கை முறை போன்ற பழக்க வழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு நோய் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக, குளிர்காலத்தில் சர்க்கரை நோயின் அபாயம் அதிகமாகக் காணப்படும். இந்நிலையில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். இதில் சர்க்கரை நோயைக் குறைக்க, குளிர்காலத்தில் சில ஆரோக்கியமன உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!
நீரிழிவு நோயைக் குறைக்க குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
இந்த குளிர்ச்சியான காலநிலையில் சர்க்கரை நோயாளிகள் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
பீட்ரூட்
குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் உணவுப் பொருள்களில் பீட்ரூட்டும் ஒன்று. நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் பல்வேறு வழிகளில் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் படி, பீட்ரூட்டை சாலட், மாவில் கலந்து ரொட்டி தயாரிப்பது போன்ற வழிகளில் உண்ணலாம்.
ஆம்லா
ஆம்லா எனப்படும் இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காயை பல வழிகளில் உணவுகள் சேர்க்கலாம். அந்த வகையில் ஆம்லா முரப்பா, ஆம்லா ஊறுகாய், சட்னி மற்றும் ஆம்லா சாறு உள்ளிட்ட பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேரட்
நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களில் ஒன்றே கேரட் ஆகும். இதனை எடுத்துக் கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை சுவையில் இனிப்பைத் தருவதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த தேர்வாகவும் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் அன்றாட வாழ்வில் கேரட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். கேரட்டை சாலட், சாறு அல்லது நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Diabetes: நெல்லிக்காயை இப்படி எடுத்துக்கிட்டா சுகர் பிரச்சனையே வராதாம்.!
கம்பு
குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த அருமருந்தாகவே கம்பு உள்ளது. தினை ரொட்டி, தினை கஞ்சி, கிச்சடி போன்ற வழிகளில் கம்புவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைச் சிறப்பாகக் கடுப்படுத்த உதவுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் கம்புவில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
இலவங்கப்பட்டை
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டையை பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இலவங்கப்பட்டை லேசான இனிப்புத் தன்மை கொண்ட உணவுப் பொருளாகும். நீரிழிவு நோயாளிகள் தேநீராக தயாரித்துக் குடிக்கலாம். இது தவிர, உணவில் மசாலாப் பொருளாகவும், இலவங்கப்பட்டை ஊறவைத்த நீராகவும் குடிக்கலாம். இவ்வாறு இலவங்கப்பட்டையை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த வகை ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Diabetes: சர்க்கரையைக் குறைக்க வெற்றிலையை இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik