புத்தாண்டு பிறந்துவிட்டது… உடல் எடையை குறைக்க வேண்டும், உணவுக்கட்டுப்பாடு, ஸ்கிரீன் டைமை குறைப்பது, வேலை, பதவி உயர்வு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானங்களை எடுத்திருப்பார்கள். அதேபோல் சர்க்கரை நோயாளிகளும் சுகர் லெவலை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பார்கள்.
ஆனால் என்ன செய்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என மனவேதனையில் இருக்கும் நீரழிவு நோயாளிகளுக்காக சில பயனுள்ள குறிப்புகளை கொண்டு வந்துள்ளோம்…
முக்கிய கட்டுரைகள்
நீரிழிவு நோய் என்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். சரியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். நீரிழிவு என்பது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கும் ஒரு நோயாகும். புது வருடத்திலாவது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இதோ…
உணவு முக்கியம்:
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு முக்கியம். இதற்கு இனிப்பைக் கைவிடுவதோ, குறைப்பதோ மட்டும் போதாது, குறைந்த கலோரிகளையே உட்கொள்ள வேண்டும். இரத்த குளுக்கோஸ் அளவை திடீரென அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும் வேண்டும்.
அதாவது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இப்படி குறைந்த கலோரிகளை சாப்பிடுங்கள். மேலும் உணவை சிறிய, சிறிய போஷன்களாக பிரித்து 4 அல்லது 6 வேளைகளாக உட்கொள்ளலாம். அதாவது அதிகம் சாப்பிடாமல் குறைவாக சாப்பிடலாம்.
உடற்பயிற்சி:

உடல் செயல்பாடு, அதாவது உடம்பை ஆக்டிவாக வைத்திருப்பது. அதே நேரத்தில், அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நடைப்பயிற்சி, யோகாசனம் செய்வது நல்லது. நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்கள் குணமடைய நேரம் எடுக்கும். இதனால் தொற்று நோய் ஏற்படலாம்.
சர்க்கரை அளவை கண்காணிக்கவும்:
இப்போதெல்லாம் வீட்டில் இருந்த படியே தினசரி ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க பல வழிகள் வந்துவிட்டன. காலை வேளையிலும், உணவுக்குப் பிந்தைய வேளையிலும் ஃபாஸ்டிங் சர்க்கரையை பரிசோதிக்க வேண்டும்.
அது கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அந்த அளவை பொறுத்து கட்டுப்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நாள் முழுவதும் 70-180 மி.கி சர்க்கரை அளவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.
நல்ல தூக்கம்:
நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் தூக்கமின்மையும் ஒன்றாகும். நன்கு உறங்கவும். சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தரமான தூக்கம் முக்கியம். அதாவது நல்ல தூக்கம். தூக்கம் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தம்:
மன அழுத்த ஹார்மோன் உடலில் அதிகரிக்கும் போது, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிகளை முயற்சிக்கவும். யோகா மற்றும் நடனம் பலன் தரும். மன அழுத்தம் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற மறக்காதீர்கள்.
Image Source: Freepik