What happens if a diabetic eats too much salt: இன்றைய மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக உணவுமுறைக் கட்டுப்பாட்டின் உதவியுடனே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
அதன் படி, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அதிகளவு உப்பு உட்கொள்வதும் நீரிழிவு நோயை உருவாக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நீரிழிவு நோயாளிகளின் நல்வாழ்வைப் பாதிக்கும் வகையிலேயே உப்பு அமைகிறது. இதற்கு உப்பில் உள்ள சோடியம் தான் காரணம். அதாவது, அதிகப்படியான சோடியம் உடலில் திரவத்தைத் தக்கவைக்க வழிவகுக்கலாம். இதுவே அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. சோடியம் உயர் இரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Management: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்..
உப்பு உட்கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படுமா?
உப்பு உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு நேரடியாக சாத்தியமில்லை. எனினும், உப்பில் உள்ள அதிகப்படியான சோடியம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தலாம். இது சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. அதன் படி, இரத்த குளுக்கோஸ் அளவுகளில் உப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அது இரத்த அழுத்தத்தை உயர்த்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆய்வு ஒன்றில், அதிக உப்பு உட்கொள்ளல் மற்றும் நீரிழிவுக்கு இடையே தொடர்பைக் கண்டறிந்ததில், அதிக உட்கொள்வது உட்கொள்வதால் நீரிழிவு நோயின் பாதிப்பு கணிசமாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
அதிகளவு உப்பு நுகர்வால் நீரிழிவு நோயாளிகளின் தாக்கம்
அதிகளவு உப்பு நுகர்வு நீரிழிவு நோயை உருவாக்குவது நேரடியாக சாத்தியமில்லை என்றாலும், மறைமுகமாக நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதிக இரத்த அழுத்தம்
அதிக சோடியம் உட்கொள்ளலின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உண்டாகலாம். மேலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாகும். ஆய்வு ஒன்றில் ஒரு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உள்ள அதிகப்படியான சோடியம் உட்கொள்ளலால் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கார்டியோவாஸ்குலார் அபாயம்
உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இது நீரிழிவு நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகும். ஆய்வு ஒன்றில், அதிக சோடியம் உட்கொள்ளலின் காரணமாக, டைப் 2 நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றிற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது. உப்பிலிருந்து நீரிழிவு நோயைப் பெறவில்லை என்றாலும், அது உயர் இரத்த அழுத்த நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Diabetes Tips: குளிர்காலத்தில் எகிறும் சர்க்கரை லெவலை டக்குனு குறைக்க இத தினமும் செய்யுங்க
சிறுநீரக பாதிப்பு
அதிகப்படியான சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஏற்கனவே நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில், ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், நாள்பட்ட சிறுநீரக நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயர் இரத்த அழுத்த மேலாண்மை மற்றும் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு போன்றவை நாள்பட்ட சிறுநீரக நோய் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
அதிக உப்பு உட்கொள்ளல் நீரிழிவு நோயை அதிகரிக்குமா?
ஆம். அதிகளவிலான உப்பு உட்கொள்ளலின் காரணமாக நீரிழிவு நோய் அபாயம் ஏற்படலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சோடியம் நிறைந்ததால் இவை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். மேலும் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையதாகும். கூடுதலாக, அதிக சோடியம் உட்கொள்வது இன்சுலின் உணர்திறனைக் குறைக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடலுக்கு சவாலாக அமைகிறது. எனவே உப்பு உட்கொள்ளலின் காரணமாக, டைப் 2 நீரிழிவு அபாயத்தில் தோராயமாக இரண்டு மடங்கு அதிகரிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ghee for diabetes: சர்க்கரை நோயாளிகள் தினமும் நெய் சாப்பிடுவதால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik