Is ghee good for diabetes: இன்றைய மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்சனைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக உணவுமுறைக் கட்டுப்பாட்டின் உதவியுடனே நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
அதன் படி, நீரிழிவு நோயாளிகள் நெய் உட்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது பலருக்கும் எழும் சந்தகமாகும். பெரும்பாலான இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருளாக நெய் கருதப்படுகிறது. இதை தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் கூட பயன்படுத்தப்படலாம். பருப்பு, ரொட்டி, காய்கறிகள் போன்ற அனைத்து உணவுகளுடன் நெய் சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிப்பதுடன், பல்வேறு ஊட்டச்சத்து ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. எனினும், நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter blood sugar: இந்த குளிர்ந்த காலநிலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? குறையுமா?
நெய் மற்றும் நீரிழிவு நோய்
நெய் ஆனது கொழுப்புகள் மற்றும் கலோரிகளுடன் இருப்பினும், வைட்டமின்கள் ஏ, டி மற்றும் கே, பியூட்ரிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் போன்றவை நிறைந்ததாக அமைகிறது. இவை அனைத்துமே வளர்சிதை மாற்ற மேம்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நீரிழிவு நோயைக் கொண்டவர்களுக்கு, எந்தவொரு விரும்பத்தகாத உடல்நல சிக்கல்களையும் ஏற்படுத்தாத வகையில் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் சீராக வைத்திருப்பது முக்கியமாகும். நெய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. எனவே இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட உணவுத் திட்டத்துடன், இதை மிதமாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பல பாரம்பரிய உணவுகளில் நெய் பிரதானமாக உள்ளது. இதில் நீரிழிவு மேலாண்மைக்கு நெய்யைப் பயன்படுத்துவதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நெய்யில் நிறைந்துள்ளது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கூடுதலாக, நெய்யில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு
நெய்யில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. அதாவது இதை எடுத்துக் கொண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவுகளில் கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்தாது. பல்வேறு கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைகிறது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கிறது.
கார்போஹைட்ரேட் இல்லாத
நெய் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத கொழுப்பு அமிலமாகும். எனவே இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. மேலும், கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தக்கூடிய நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில், இது குளுக்கோஸ் அளவை உயர்த்தாமல் ஆற்றல் நிறைந்த ஆதாரத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Winter Diabetes Tips: குளிர்காலத்தில் எகிறும் சர்க்கரை லெவலை டக்குனு குறைக்க இத தினமும் செய்யுங்க
செரிமான ஆரோக்கியத்திற்கு
வயிற்று அமிலங்களின் சுரப்பைத் தூண்டும் விதமாக நெய் அமைகிறது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
பியூட்ரிக் அமிலம்
நெய்யில் லினோலெனிக் அமிலத்தைத் தவிர ப்யூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் ஆகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை செரிமான செயல்முறையை மேம்படுத்தி, சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் எவ்வளவு நெய் சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் நெய்யை அடிக்கடி சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. இதன் சாத்தியமான நன்மைகள் இருப்பினும், நெய் கலோரி அடர்த்திமிக்கது என்பதால், இதன் அதிகப்படியான நுகர்வு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். எனவே நெய்யை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த விளைவைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ragi for Diabetes: சர்க்கரை நோயாளிகள் ராகி சாப்பிடலாமா? இதன் நன்மைகள் இங்கே!
Image Source: Free