$
Eating Rice When You Have Diabetes: இன்றைய காலத்தில் செயலற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் இளைஞர்கள், சிறுவர்கள் என னைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், சரியான உணவுமுறை மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இவை உங்க இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். நம்மில் பலர் கூறுவோம், சர்க்கரை நோயாளிகள் சாதத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும் என. ஆனால், அதற்கு அவசியம் இல்லை. சரியான மற்றும் அளவாக சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த பதிவும் உதவலாம் : Foods For Diabetes: பாடாய்ப் படுத்தும் சுகர் லெவலை சட்டென குறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனன் வோரா நமக்கு பகிர்ந்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிட கூடாதா? அப்படி சாப்பிட்டால் எப்படி சாப்பிடணும் என்பதை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
வடித்த சாதம் சாப்பிடவும்

சர்க்கரை நோயாளிகள் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடுவதற்கு பதில், சட்டியில் வடித்த சாதத்தை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், குக்கரில் வைக்கும் சாதத்தில் அதன் தண்ணீர் உள்ளேயே தங்கிவிடும். ஆனால், விடுத்த சாதம் சாப்பிடும் போது அதில் உள்ள தண்ணீரை நாம் தனியாக அகற்றி விடுவோம். இதனால், அதில் உள்ள மாவுச்சத்து குறைந்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
சாதத்தை குறைவாக சாப்பிடுங்கள்
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கோ சர்க்கரை நோய் இருந்தால், முடிந்தவரை அரிசி சாப்பிடுவதைக் குறைக்கவும். அதிக அரிசி சாதம் சாப்பிடுவதால் மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவையும் வெகுவாக அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Moringa For Diabetes: நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் இதோ! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
சாதம் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யுங்கள்

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், சாதம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பதையோ அல்லது தூங்குவதையோ தவிர்க்கவும். சாதம் சாப்பிட்ட பின் விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது மெதுவான நடைப்பயிற்சி செய்யவும். இப்படி செய்வதால், உடலில் கொழுப்பு சேராது, உணவும் எளிதில் ஜீரணமாகும்.
இந்த உணவுகளையும் சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால், சீஸ், முட்டை, பச்சை காய்கறிகள், கோழி அல்லது பிற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes In Summer: கோடை காலம் முழுவதும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க இந்த விஷயங்களை இப்போதே செய்யுங்க!
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அதிகமாக சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில், அரிசியின் கிளைசெமிக் குறியீடு மிகவும் அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Pic Courtesy: Freepik