Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Moringa For Diabetes: நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் இதோ! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

How To Use Moringa For Diabetics: நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இதில் டைப் 2 நீரிழிவு நோயால் இன்சுலின் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இது பலவீனமான நோயாக இருப்பின், இதை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றதாகும்.

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க மிகச்சிறந்த வழியாக ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதாகும். அந்த வகையில் நீரிழிவுக்கான உணவுகளில் முருங்கை பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Foods For Diabetes: பாடாய்ப் படுத்தும் சுகர் லெவலை சட்டென குறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

சர்க்கரை நோய்க்கு முருங்கை

முருங்கை ஒலிஃபெரா என அழைக்கப்படுகிறது. முருங்கையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் காய்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

முருங்கையில் நிறைந்துள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. முருங்கையைப் பயன்படுத்துவது ஆயுர்வேத முறையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. முருங்கையை எடுத்துக் கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் சர்க்கரை நோய்க்கு முருங்கை எவ்வாறு உதவுகிறது என்பது குறித்துக் காண்போம்.

நீரிழிவு நோய்க்கு முருங்கை தரும் நன்மைகள்

பல்வேறு வழிகளில் முருங்கை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது. ஆனால், நீரிழிவு உணவில் முருங்கையைச் சேர்ப்பது நல்லதா? இதில் நீரிழிவு நோய்க்கு முருங்கை தரும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க

செல்கள் இன்சுலினுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பது இன்சுலின் உணர்திறன் ஆகும்.  நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், அதிக பிரக்டோஸ் உணவில் தூண்டப்பட்ட இன்சுலின் எதிர்ப்பை முருங்கை மாற்றியமைப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகலாம். மொரிங்கா போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க முருங்கை உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதற்கும் முருங்கை இலை பவுடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சர்க்கரை நோய்க்கு முருங்கை பயன்படுத்துவது எப்படி?

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் முருங்கையைப் பல்வேறு வழிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கை இலைப்பொடி

முருங்கை இலைப்பொடியை ஸ்மூத்திஸ், பழச்சாறுகள் அல்லது தயிர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மற்ற காய்கறிகளுடன்

கீரைகள் அல்லது மற்ற காய்கறிகளுடன் முருங்கையைச் சேர்த்துக் கொள்ளலாம். அதே சமயம், சூப்கள், பொரியல்கள் போன்றவற்றில் முருங்கை இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கை விதைகள்

சிலர் முருங்கை விதைகளைப் பச்சையாக சாப்பிட விரும்புவர். இதை வறுத்து அல்லது பொடியாக அரைத்து உணவு அல்லது பானங்களில் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த வழிகளில் சர்க்கரை நோயாளிகள் முருங்கையை எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Stress and Diabetes: அதிகளவு ஸ்ட்ரெஸ் இருந்தா சர்க்கரை நோய் வருமாம்! உஷாரா இருந்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Stress and Diabetes: அதிகளவு ஸ்ட்ரெஸ் இருந்தா சர்க்கரை நோய் வருமாம்! உஷாரா இருந்துக்கோங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content