Thu Oct 29, 2026 | 10:50 AM IST

சர்க்கரை vs வெல்லம் நீரிழிவு நோயாளிக்கு எது நல்லது தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Sugar or jaggery which is better for diabetes: நீரிழிவு நோய்க்கு சர்க்கரை அல்லது வெல்லம் இதில் எது சிறந்ததா இருக்கும் என்ற கேள்வி எழும். உண்மையில், சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையை விட வெல்லம் அதிக நன்மை பயக்கும். ஆனால், ஏன் இவ்வாறு கூறப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
சர்க்கரை vs வெல்லம் நீரிழிவு நோயாளிக்கு எது நல்லது தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோசர்க்கரை vs வெல்லம் நீரிழிவு நோயாளிக்கு எது நல்லது தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Which is better sugar or jaggery for diabetic patients: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் அடங்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நபர்கள் பெரும்பாலும் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்பதை பலரும் கூறியுள்ளதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில், இனிப்புகளை உட்கொள்வதால் அவர்களுக்குத் திடீரென இரத்த சர்க்கரையை அதிகரிப்பதுடன், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பின் காரணமாக உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

இரத்த சர்க்கரை அதிகரிப்பால் நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் மற்றும் மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எவ்வாறாயினும், நீரிழிவு நோய் என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும். நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் இருக்கலாம். எனினும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தலாம். இது போன்ற நிலையில், சில நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

இந்த பதிவும் உதவலாம்: நீரழிவு, எடையைக் கட்டுப்படுத்த இந்த ஒரு காயை மட்டும் தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!

இந்நிலையில், சிலர் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட விரும்புகின்றனர். எனவே சர்க்கரையை விட நீரிழிவு நோயாளிக்கு வெல்லம் உண்மையில் அதிக நன்மை பயக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இது பற்றி அறிய, திவ்யா காந்தியின் டயட் & நியூட்ரிஷன் கிளினிக்கின் உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நீரிழிவு நோய்க்கு வெல்லம் vs சர்க்கரை எது சிறந்தது?

தாது உள்ளடக்கம்

வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு முக்கிய கூறுகள் உள்ளது. அதே சமயம், சர்க்கரையில் அத்தகைய கூறுகள் இல்லை. நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை சாப்பிடும் போது, பல அத்தியாவசிய கூறுகள் அவர்களின் உடலுக்கு வழங்கப்படுகிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

பதப்படுத்தப்படாதது

பதப்படுத்தப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், வெல்லம் பெரும்பாலும் இயற்கையான மற்றும் குறைவான பதப்படுத்தப்பட்ட இனிப்பானாகக் கருதப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையை விட வெல்லம் ஒரு சிறந்த தேர்வாகும்.

கிளைசெமிக் குறியீடு

வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகும். அதாவது இது இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கிளைசெமிக் குறியீட்டில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். இதற்கு இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும் இத்தகைய பொருட்களை உட்கொள்வது சரியானதாக இருக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நீரழிவு நோயாளிகள் இயற்கையாக சர்க்கரையை கட்டுப்படுத்த தினமும் இந்த ஒரு டீயைக் குடித்தால் போதும்...!

நீரிழிவு நோயாளிகளுக்கு நிபுணர் தரும் ஆலோசனை

நிபுணரின் கூற்றுப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையை விட வெல்லம் சிறந்தது என கருதப்பட்டாலும், வெல்லம் இனிப்புச் சுவை கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சாத்தியமானதாக இருக்காது.

இயற்கை மூலங்களைத் தேர்ந்தெடுப்பது

நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளுக்கு வெல்லத்திற்குப் பதிலாக இயற்கை மூலங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வரிசையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை சிறந்தவையாகும்.

இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க கூடாது

தினமும் வெல்லம் உட்கொள்வதாக இருப்பின், இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது நல்லது. அவ்வப்போது பரிசோதித்து, தேவைப்படும்போதெல்லாம் வெல்லம் மற்றும் சர்க்கரை இரண்டையும் உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

குறைந்த அளவில் உட்கொள்வது

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை தேவைகளை மனதில் கொண்டு குறைந்த அளவில் வெல்லத்தை உட்கொள்வது அவசியமாகும். எனினும், தினமும் வெல்லம் உட்கொள்ளக் கூடாது. எப்போதாவது இது பரவாயில்லை என்றாலும், வழக்கமான உணவில் இதை ஒரு பகுதியாக மாற்ற விரும்பினால், நிபுணரை அணுகுவது நல்லது.

ஒட்டுமொத்தமாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் இதை குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். மேலும், இதை எப்போதும் அவர்களின் சீரான உணவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க இந்த உணவுப் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

→ எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க இந்த உணவுப் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.