Pistachios Good For Diabetics: இன்று பலரும் விரும்பி உண்ணும் நட்ஸ்களில் ஒன்று பிஸ்தா ஆகும். இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அந்த வகையில் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் ஊட்டச்சத்துக்களை பிஸ்தா கொண்டுள்ளது. மேலும், இது வைட்டமின் பி6-ன் நல்ல மூலமாகும்.
இது தவிர, பிஸ்தாக்களில் நல்ல அளவிலான இரும்பு, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இதில் சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அச்சால்டா சமூக சுகாதார மையத்தின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் கவுரவ் குமார் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Soups For Diabetes: நீரிழிவு நோய்க்கு இந்த சூப் குடிங்க.! சர்க்கரை அளவை பார்த்து ஆச்சரியப்படுவீங்க.
நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடுவது சர்க்கரை அளவைக் குறைப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்க
டாக்டர் கௌரவ் கூற்றுப்படி, “இன்றைய நவீன காலகட்டத்தில் தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிஸ்தாவை சமச்சீர் உணவில் சேர்த்துக் கொள்வது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பிஸ்தாக்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆல்பா-லிபோயிக் அமிலம் போன்றவை இன்சுலின் விளைவை ஊக்குவிப்பதுடன், நீரிழிவு அபாயத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது”.
நீரிழிவு நோயில் எடைக் கட்டுப்பாட்டிற்கு பிஸ்தா
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும். இந்த சூழ்நிலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிஸ்தாவை உண்பது எடை இழப்பு பயணத்தை எளிதாக்கலாம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷனின் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உணவில் பிஸ்தாவை பகுதி கட்டுப்பாடு சிற்றுண்டியாக சேர்த்துக் கொள்வது உடலில் டிரைகிளிசரைடு அளவை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.
நீரிழிவு நோயில் இதய ஆரோக்கியத்திற்கு
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படலாம். இது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். இந்த சூழ்நிலையில் தினமும் பிஸ்தாவை சரியான அளவில் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். பிஸ்தாவை உண்பது உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
இது தவிர, தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கும், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் பிஸ்தாவில் காணப்படுகிறது. மேற்கூறிய வகையில், பிஸ்தா நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், இதை குறைந்த அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Diabetes: சர்க்கரையைக் குறைக்க வெற்றிலையை இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik