Expert

Soups For Diabetes: நீரிழிவு நோய்க்கு இந்த சூப் குடிங்க.! சர்க்கரை அளவை பார்த்து ஆச்சரியப்படுவீங்க.

  • SHARE
  • FOLLOW
Soups For Diabetes: நீரிழிவு நோய்க்கு இந்த சூப் குடிங்க.! சர்க்கரை அளவை பார்த்து ஆச்சரியப்படுவீங்க.


குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அந்த வகையில் உடலை சூடாகவும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் சூப்கள் உதவுகின்றன. அப்படியென்றால், எந்த சூப் வகைகள் ஆரோக்கியமானது? என்பதே அடுத்த கேள்வியாகும். இதில் குளிர்காலத்தில் உணவில் சேர்க்க வேண்டிய சூப் வகைகள் குறித்து டயட் என் க்யூர் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Diabetes: சர்க்கரையைக் குறைக்க வெற்றிலையை இப்படி சாப்பிடுங்க.

நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய சூப் வகைகள்

கேரட் மற்றும் இஞ்சி சூப்

குளிர்காலத்தில் கேரட்டை அதிகம் எடுத்துக் கொள்ள விரும்புவர். அதே போல, இஞ்சி டீயும் அதிகம் அருந்துவர். இவை இரண்டுமே குளிர்கால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும் பங்கு வகிக்கிறது. கேரட்டின் பீட்டா கரோட்டீன் மற்றும் இஞ்சியின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

பருப்பு மற்றும் காய்கறி சூப்

பொதுவாக பருப்பு வகைகள் நல்ல நார்ச்சத்து மிகுந்த வகைகளாகும். அதே சமயம், பருப்புடன் ஆரோக்கியமான காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இவை இரண்டுமே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. காய்கறிகள் நிறைந்த பருப்பு சூப் வகை நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாகும். அது மட்டுமின்றி இவை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், அதியம் சாப்பிடுவதைத் தடுக்கிறது.

சீமை சுரக்காய் மற்றும் குடைமிளகாய்

சீமை சுரக்காய் ஆனது நீர்ச்சத்துக்கள் நிறைந்த ஒரு பச்சை காய்கறியாகும். சுரைக்காயுடன் மிளகாய்த்தூள் கலந்து சூப் செய்து அருந்துவது குளிர்காலத்தில் சிறந்த தேர்வாகும். குடைமிளகாய், சீமை சுரக்காய் இரண்டுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவுப்பொருளாகும். மேலும், இவை வைட்டமின் சியின் நல்ல மூலமாக இருப்பது சளி மற்றும் இருமலில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்த சூப்பை அருந்துவதன் மூலம் மாரடைப்பு அல்லது இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits: அரை கப் பீட்ரூட் துண்டு போதும். நீரிழிவு பிரச்சனையை ஈஸியா குறைக்கலாம்.!

ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் சூப்

இவை இரண்டுமே நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அது மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை தவிர, காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி சூப்பைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

தக்காளி மற்றும் கீரை சூப்

இந்த இரண்டு உணவுப் பொருள்களிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. இந்த சூப் அருந்துவது குளிர்காலத்தில் உடலை உஷ்ணமாகவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ, சி சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இது முடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

நீரிழிவு நோயாளிகள் இந்த சூப் வகைகளை அருந்தி வருவது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது இதய ஆரோக்கியம், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.

Image Source: Freepik

Read Next

Barley Water: சர்க்கரை அளவை சட்டென குறைக்க பார்லி தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!

Disclaimer