Best Fruits To Eat For Diabetics: நீரிழிவு நோயானது சிறியவர்கள் முதல் பெரிவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறிவிட்டது. இதற்கு மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களே காரணமாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க விரும்புபவர்கள் உணவுக்கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நிறைந்த பழங்கள், திண்பண்டங்கள், உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுவர்.
அதே சமயம், சர்க்கரை நோயாளிகள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் வகையில் குறைந்தளவிலான சர்க்கரை கொண்ட பழங்கள் உள்ளன. இந்த பழங்கள் குறைவான சர்க்கரை அளவைக் கொண்டதுடன், பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Immunity Tips: சர்க்கரை நோயாளிகள் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க.
நீரிழிவு நோயாளிகளுக்கான குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்
சர்க்கரை நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் குறைந்தளவு சர்க்கரை கொண்ட பழங்கள் சிலவற்றைக் காணலாம்.
ஆப்பிள்கள்
பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள் ஆகும். இதில் நிறைந்துள்ள இயற்கையான இனிப்பு மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது. ஆப்பிளில் நிறைந்துள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஆப்பிளில் உள்ள குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, அவுரிநெல்லி போன்றவை அடங்கும். இது சுவையானது மட்டுமல்லாமல், குறைந்தளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது. பெர்ரி வகைகளில் நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனுடன், குறைந்த கார்போஹைட்ரேட்டுகளும், குறைந்த கிளைசெமிக் குறியீடும் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு தயிர், ஓட்ஸ் கலவையில் அல்லது சிற்றுண்டியில் பெர்ரி பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் வைக்க உதவுகிறது.
ஆரஞ்சு
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழமாக ஆரஞ்சு உள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. இதில் சர்க்கரை உள்ளடக்கம் குறைவாக இருப்பினும், இயற்கையான சர்க்கரை உள்ளடக்கத்தின் காரணமாக பகுதி அளவுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரஞ்சுகளை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதன் புத்துணர்ச்சியூட்டும் சுவை நீரிழவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க
மாதுளை
இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளது. இது அதிக குளுக்கோஸ் அளவு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சர்க்கரை குறைவாக இருப்பதுடன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல வளமான மூலமாகும். இவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை சேர்க்காமல் மாதுளைச் சாற்றை மிதமாக எடுத்துக் கொள்ளலாம்.
பேரிக்காய்
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழமாகும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பேரிக்காயில் சர்க்கரை குறைவாக உள்ளதால் இது சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாகும். இதன் நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பழங்கள் அனைத்தும் குறைவான சர்க்கரை அளவுடன், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. எனவே இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழங்களாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Leg Pain During Diabetes: நீரிழிவு கால்வலிக்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும்!
Image Source: Freepik