Leg Pain During Diabetes: நீரிழிவு கால்வலிக்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும்!

  • SHARE
  • FOLLOW
Leg Pain During Diabetes: நீரிழிவு கால்வலிக்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும்!


நீரிழிவு நோயாளிகளுக்கு கால்வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

  • நீரிழிவு நோயாளிகள் தொற்று காரணமாக கால்களில் வலி ஏற்படுகிறது
  • வைட்டமின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு கால்வலி ஏற்படலாம்
  • இரத்த சர்க்கரை சமநிலையின்மை காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு கால்வலி ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கால்வலியைக் குறைக்கும் வழிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்வலி ஏற்படுவது பொதுவானதாக இருப்பினும், இதைத் தவிர்க்க சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்.

வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கால்வலி பிரச்சனைக்கு வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நரம்புகளை சேதமடையாமல் பாதுகாக்க வைட்டமின் பி12 உட்கொள்வது அவசியமாகும். நரம்புகளில் பலவீனம் இருப்பின், இந்த வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டியை உட்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் டி சத்துக்களை சூரிய ஒளி மற்றும் பால் போன்றவற்றிலிருந்து பெற முடியும்.

நீட்சி உடற்பயிற்சி

நீரிழிவு நோயாளிகள் கால்வலி பிரச்சனையைச் சந்திப்பதாக இருப்பின், அவர்கள் நீட்டிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தவிர கால்களை மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வதற்கு ஏற்ப கால்களை வசதியாக வைத்து, எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

உப்புநீர் பயன்பாடு

வெந்நீரில் உப்பு கலந்த கரைசலைத் தயார் செய்து, அதில் கால்களை மூழ்க வைத்து உட்கார வைக்க வேண்டும். இது [பாதத்தில் ஏற்படும் வலியை குணப்படுத்தலாம். உப்புநீரில் கால்களை ஊறவைப்பதன் மூலம் பாதங்களில் ஏற்படும் வீக்கப் பிரச்சனை நீ்க்கி வலி குறையலாம். கால் வலி குறைய கடுகு எண்ணெயைப் பாதத்தில் தடவ வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Hearing Loss: சர்க்கரை நோய் கேட்கும் திறனை பாதிக்குமா? நிபுணர் தரும் விளக்கம்.

நீரேற்றமாக இருப்பது

நீரிழப்பு காரணமாகவும் கால் வலி உண்டாகலாம். இதற்கு தினந்தோறும் 8 முதல் 10 டம்ளர் அளவு நீர் அருந்த வேண்டும். மேலும் திடீரென கால்களில் வலி ஏற்படும் போது தண்ணீரைத் தவிர, தேங்காய் தண்ணீர், மோர், ஜூஸ், போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் திரவ உணவுகளை உட்கொள்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் வலியைக் குறைக்கிறது.

சர்க்கரை நோய்க்கு உகந்த உணவு

கால்களில் வலி ஏற்படின், நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாததே காரணமாகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கால்வலி இல்லாமல் போகலாம். இதற்கு முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்த்க் கொள்ளலாம். இது தவிர, பால் பொருள்கள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயில் கால்வலி பிரச்சனை நீங்க மேலே கூறப்பட்டவற்றை பின்பற்றலாம். எனினும், நீரிழிவு நோயில் 5 முதல் 6 மணி நேரத்திற்குள் கால்வலி குறையவில்லையெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Walking For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க

Disclaimer