What is the main cause of fatigue in men: அன்றாட வாழ்வில், பரபரப்பான காலகட்டத்தில் பலரும் சோர்வை சந்திக்கின்றனர். குறிப்பாக, வேலையில் இருக்கும்போது, சோர்வாக உணருவதால், கையில் உள்ள பணிகளை முடிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. நமது வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையில், சோர்வை சந்திப்பதால் பல வேலைகள் செய்ய முடியாமலே போய் விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், இப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் மக்களிடையே சோர்வு இருப்பது மிகவும் பொதுவானதாகி விட்டது.
எனினும், ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, அதிக திரவங்களை குடிப்பது, சமூக நாட்காட்டியை ஒழுங்கமைத்தல், அதிக தூக்கம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளைக் கொண்டு இந்த சோர்வை சரி செய்யலாம். இதில் ஆண்கள் சந்திக்கக் கூடிய சோர்விற்கான காரணங்கள் சிலவற்றையும், சோர்விலிருந்து விடுபட அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம். இதன் மூலம் சோர்விலிருந்து விடுபடுவதுடன், புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
சோர்வை ஏற்படுத்தக்கூடிய சில சுகாதார நிலைமைகள்
இன்சுலின் எதிர்ப்பு
உடலில் உள்ள இன்சுலின் என்ற ஹார்மோன், உடலின் செல்களுக்குள் ஊட்டச்சத்துக்களை, குறிப்பாக குளுக்கோஸ் அல்லது சர்க்கரையை கொண்டு செல்ல முடியாத நிலையே இன்சுலின் எதிர்ப்பு எனப்படுகிறது. இதனால் செல்கள் இரத்த சர்க்கரையை சரியாக உறிஞ்ச முடியாமல் போகலாம். இவை உடல் முழுவதும் போதுமான அளவு ஆற்றலை மாற்ற முடியாத நிலையை உண்டாக்குகிறது. மேலும் இது அதிக இன்சுலின் வீக்கத்தையும் உருவாக்குகிறது. இது குணப்படுத்துவதைத் தடுப்பதுடன், உடலை குழப்பமடையச் செய்யலாம் மற்றும் ஆற்றல் அளவைப் பாதிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: எப்போதும் ஆற்றலுடன் இருக்க இந்த உணவுகளை சாப்பிடவும்..
தீர்வு
வழக்கமான பரிசோதனைகளின் போது உண்ணாவிரத குளுக்கோஸ் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உண்ணாவிரத குளுக்கோஸ் அளவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருப்பின், அது ஒருவருக்கு இன்சுலின் எதிர்ப்பு பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறியைக் குறிக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் போன்றவற்றின் மூலம் இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது தூக்கத்தின் போது சுவாசிப்பதில் குறுகிய கால இடையூறுகளால் ஏற்படக்கூடிய ஒரு கோளாறு ஆகும். இது மிகவும் பொதுவான வகையாகும். தூக்கத்தின் போது ஏற்படும் இந்த மூச்சுத்திணறலில், மேல் காற்றுப்பாதை உண்மையில் சில வினாடிகள் மூடப்படும் அல்லது சரிந்துவிடும். இது மூளையை மீண்டும் சுவாசிக்கத் தொடங்க சமிக்ஞை அளிக்கிறது. இது குறட்டை மூலம் சமிக்ஞை செய்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் சோர்வை உண்டாக்கும்.
தீர்வு
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர், ஒரு தூக்க மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்குவதை உள்ளடக்குகிறது. அங்கு அவருக்கு பாலிசோம்னோகிராம் செய்யப்படுகிறது. அதாவது தூக்க முறைகள், சுவாச மாற்றங்கள் மற்றும் மூளை செயல்பாட்டைக் கண்காணிக்கும் வலியற்ற சோதனையாகும். இந்த தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறிகளைக் குறைப்பதற்கு எடையைக் குறைப்பது, புகைபிடித்தலை நிறுத்துவது மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்றவற்றைக் கையாளலாம்.
தைராய்டு நோய்
கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, உடலில் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. இந்நிலையில், தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக இருக்கும்போது, சோர்வை ஏற்படுத்தி அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்தவுடன் சோர்வா? வேகமா வேலை செய்ய நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க
தீர்வு
தைராய்டு நோய் இருப்பதை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மேலும், இவை சிகிச்சையளிக்கக்கூடியவையாகும். எனவே சோர்வு மற்றும்/அல்லது தசை பலவீனம் இருப்பதாக உணரும் நபர்கள் அனைவரும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த டெஸ்டோஸ்டிரோன்
மனித உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோனே டெஸ்டோஸ்டிரோன் ஆகும். இது முக்கியமாக ஆண்களில் விந்தணுக்களில் உற்பத்தி செய்யப்படக்கூடியது. பொதுவாக, வயதாகும்போது ஆண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைகிறது. இந்நிலையில், ஆண்கள் வயதாகும்போது அது குறைய வேண்டியதை விட அதிகமாகக் குறையும் போது பல்வேறு அறிகுறிகளை காண்பிக்கும். இதில் ஒன்றாக சோர்வும் அடங்குகிறது.
தீர்வு
தூக்கத்தின் போது ஆண்கள் தங்கள் தினசரி டெஸ்டோஸ்டிரோனை அதிகம் உற்பத்தி செய்கின்றனர். அதாவது குறைவான தூக்கம் என்றால் குறைவான டெஸ்டோஸ்டிரோன் என்று பொருள்படும். எனவே, இதற்கான முதல் தீர்வாக நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது அடங்கும். மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மிதமான அளவிலான விலங்கு கொழுப்பு போன்றவற்றின் கலவையுடன் நல்ல ஆரோக்கியமான உணவைப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வது சோர்வு உணர்வுகளைக் குறைக்க உதவுகிறது.
அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் சோர்வை சரி செய்யலாம். எனினும், இந்த மாற்றங்களைச் செய்த பிறகும் சோர்வாக உணர்ந்தால், கட்டாயம் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப சோர்வா இருக்கீங்களா? உடனடியா எனர்ஜிட்டிக் ஆக இந்த உணவுகளை சாப்பிடுங்க..
Image Source: Freepik