
$
Diabetes Hearing Loss Symptoms And Prevention: நீரிழிவு நோய் என்பது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் நாள்பட்ட நிலையாகும். ஏனெனில், இது இதயம் மற்றும் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கலாம். மேலும், நீரிழிவு நோய் கேட்கும் திறனையும் பாதிக்கும். ஆம். நீரிழிவு நோயாளிகள், காது கேளாமைக்கான அறிகுறிகளையும் அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.
நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால், உடலில் பல பாகங்கள் சேதமடையலாம். இதில் காதுகளும் அடங்குகின்றன. இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, காதுகளின் இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். இந்த சமயத்தில் கேட்கும் இழப்பு நிகழ்கிறது. இதில் நீரிழிவு நோய்க்கும், காது கேளாமைக்கும் என்ன தொடர்பு என்பதை இந்தியாவின் குடும்ப மருத்துவர்கள் டாக்டர் ராமன் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
நீரிழிவு நோயாளிகள் கேட்கும் திறன் பாதிப்படைவதற்குக் காரணம்
நீரிழிவு நோயால் உடலின் பல்வேறு பாகங்கள் பாதிப்படையலாம். இதில் கைகள், கால்கள், கண்கள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவை அடங்கும். இதில் காதுகளும் அடங்குகிறது. அதாவது சர்க்கரை நோயால் காதுகளில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.
உயர் இரத்த சர்க்கரை அளவானது, காதுகளின் இரத்த நாளங்கள் உட்பட முழு உடலையும் சேதப்படுத்துகிறது. இதில், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை எனில், அவை காதுகளில் உள்ள இரத்த நாளங்களின் பரந்த நெட்வொர்க்கை சேதப்படுத்தலாம். மேலும், உயர் இரத்த சர்க்கரை அளவு காது கேளாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இதில் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு இரண்டிலும் செவித்திறன் பாதிக்கப்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Blood Sugar Level: உணவு சாப்பிட்ட பின் இருக்க வேண்டிய இரத்த சர்க்கரை அளவு..
நீரிழிவு நோயாளிகளின் காது கேளாமைக்கான அறிகுறிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு காது கேளாமை படிப்படியாக் ஏற்படலாம். எனவே, காது கேளாமையின் அறிகுறிகளை அனுபவிப்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால், கேட்கும் திறன் பாதிக்கப்பட்டால், இந்த அறிகுறிகளை கட்டாயம் புறக்கணிக்கக் கூடாது.
- மென்மையாகப் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்பதில் சிரமம் உண்டாகுதல்
- பலருடன் பழகுவதில் சிக்கல் உண்டாகுதல்
- மற்றவர்களை மீண்டும் மீண்டும் சொல்லும்படி கேட்பது
- ரேடியோ, டிவி ஒலிகளைக் கேட்பதில் சிரமம்
- சத்தமில்லாத இடங்களில் கேட்பதில் சிரமம்
இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்குக் காது கேளாமையினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காது கேளாமை பிரச்சனையைத் தடுக்கும் முறைகள்
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் செவித்திறன் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை பற்றி அறிந்து கொள்ள ஆண்டுதோறும், செவித்திறன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
- செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டால், அதைத் தவிர்க்க, காது சொட்டுகள் அல்லது மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்ளலாம்.
- நீரிழிவு நோயால் கேட்கும் திறன் பாதிக்கப்படும் போது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்க, ஆரோக்கியமான உணவுகளைக் கையாள வேண்டும். மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில், இது இதயம் மற்றும் கேட்கும் திறனையும் பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version