Symptoms and effects of epilepsy: கால் கை வலிப்பு ஆனது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒரு நிலையாகும். இது தவறான எண்ணங்களால் சூழப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியை நாடவோ அல்லது நிறைவான வாழ்க்கையை வாழ்வதையோ தடுக்கலாம். பொதுவாக வலிப்பு நோயானது மூளையில் ஏற்படும் திடீர் அசாதாரண மின் செயல்பாட்டினால் ஏற்படும் நரம்பியல் கோளாறைக் குறிப்பதாகும். இது வலிப்புத் தாக்கங்களுக்கு வழிவகுக்கலாம். பொதுவாக வலிப்புத்தாக்கங்கள் அதன் வகை மற்றும் தீவிரத்தில் பரவலாக மாறுபடலாம். அதன்படி, பெரிய வலிப்புத்தாக்கங்களின் காரணமாக சுய நினைவு இழப்பு, கீழே விழுதல் மற்றும் முழு உடலின் தன்னிச்சையான அசைவுகள் போன்றவை அடங்கும்.
சிறிய வலிப்புத்தாக்கங்களின் காரணமாக ஒரு குறிப்பிட்ட உடல் பாகத்தின் இழுப்பு, குழப்பம், பார்வை அல்லது செவிப்புலன் தொந்தரவுகள் போன்ற அசாதாரண உணர்ச்சி போன்றவை ஏற்படலாம். ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டப்படாத வலிப்புத்தாக்கங்களை அனுபவிக்கும் போது கால்-கை வலிப்பு நோயறிதல் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கால்-கை வலிப்பால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது 1,000 பேருக்கு 6-10 நபர்கள் என்ற விகிதத்தில் ஏற்படுகிறது. குறிப்பிடத்தக்க பாதிப்பு இருந்தபோதிலும், பலருக்கு முறையான சிகிச்சை கிடைக்காததால் தேவையற்ற துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதன் படி, ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனைகள், மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், மருத்துவர் எம்.சௌமியா அவர்கள் வலிப்பு நோய்க்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Tumor Symptoms: மூளைக்கட்டி வகைகள், அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள்
வலிப்புத்தாக்கங்களின் வகைகள்
தனிநபர்களுக்கிடையே வலிப்புத்தாக்கங்கள் வித்தியாசமாக வெளிப்படுகிறது. இதன் பொதுவான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
- கைகள், கால்கள் அல்லது உடலின் மற்ற பாகங்களின் கட்டுப்பாடற்ற அசைவுகள்
- நினைவாற்றல் இழப்பு, தற்காலிக குழப்பம்
- பேசுவது அல்லது புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவது
- பார்வைக் கோளாறுகள் அல்லது வினோதமான வாசனை அல்லது எச்சரிக்கை உணர்வுகள்
வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
எந்தவொரு நோய்க்கான பயனுள்ள சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கு மூல காரணத்தைக் கண்டறிவது அவசியமாகும். இதில் வலிப்பு ஏற்படுவதற்கான சில பொதுவான காரணிகளைக் காணலாம்.
நோய்த்தொற்றுக்கள்
மூளைக்காய்ச்சல் அல்லது மூளையழற்சி போன்ற நிலைமைகளால் வலிப்பு ஏற்படலாம்.
மரபியல் காரணங்கள்
பரம்பரை முன்கணிப்புகள் அல்லது வளர்ச்சி நிலைமைகள் போன்ற மரபியல் காரணிகளால் வலிப்பு நோய் ஏற்படலாம்.
வளர்ச்சிதை மாற்ற பிரச்சனை
குறைந்த அல்லது அதிகளவு இரத்த சர்க்கரை, சோடியம் சமநிலையின்மை அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்றவற்றால் வலிப்பு ஏற்படுகிறது.
வாஸ்குலர் பிரச்சினைகள்
பிரசவத்தின் போது பக்கவாதம் ஏற்படுவது அல்லது ஹைபோக்சிக் காயங்கள் போன்றவை வலிப்பு நோய்க்கான காரணங்களாகும்.
பொருள் தொடர்பான காரணங்கள்
அதிகப்படியான மது அருந்துதல், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு போன்றவையும் வலிப்புக்கான காரணியாகும்.
மூளைச் சிக்கல்கள்
மூளைக் கட்டிகள், தலையில் காயம் அல்லது மூளை அமைப்பில் ஏற்படும் அசாதாரணங்களின் காரணமாக வலிப்பு ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Tumor Symptoms: இந்த அறிகுறிகளை அப்படியே விட்ராதீங்க.. பிரைன் டியூமரா இருக்கலாம்..
கால்-கை வலிப்பால் ஏற்படும் விளைவுகள்
ஒருவருக்கு கால்-கை வலிப்பு ஏற்படுவதால், அது அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
உடல் காயங்கள்
வலிப்புத்தாக்கங்களின் காரணமாக வீழ்ச்சி அல்லது பிற விபத்துகள் ஏற்படலாம்.
அறிவாற்றல் குறைபாடு
கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவாற்றல் பிரச்சனைகள் வலிப்பு காரணமாக ஏற்படுவதாகும். இது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கலாம்.
தினசரி நடவடிக்கைகளில் வரம்புகள்
வலிப்புத்தாக்கங்களின் விளைவால், ஒருவர் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படலாம்.
மனநல பிரச்சனைகள்
வலிப்புத் தாக்கங்களால் கவலை, மனச்சோர்வு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கால்-கை வலிப்புக்கான சிகிச்சை முறைகள்
கால்-கை வலிப்பை நிர்வகிப்பதற்கு மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் தேவைப்படுகிறது. இது கால்-கை வலுப்புக்கான சிகிச்சை முறைகளாகும்.
மருந்துகள்
வலிப்பு நோய்க்கு ஆண்டிபிலெப்டிக் மருந்துகள் முதல் வரிசை சிகிச்சையாகக் கருதப்படுகிறது. இது வலிப்புத்தாக்கங்களைத் தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
அறுவை சிகிச்சை முறைகள்
கால்-கை வலிப்புக்கு மருந்து எதிர்ப்பு மிக்கதாக இருக்கலாம். இந்நிலையில், அறுவை சிகிச்சை விருப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மூளை பகுதியை அகற்றுவது அல்லது மின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் சாதனங்களை பொருத்துவது போன்றவை அடங்கும்.
நியூரோமாடுலேஷன் சிகிச்சை முறைகள்
வேகஸ் நரம்பு தூண்டுதல் (VNS) ஆனது ஒரு சாதனம் வேகஸ் நரம்புக்கு மின் தூண்டுதல்களை வழங்குகிறது. இது வலிப்புக்கான அதிர்வெண்ணைக் குறைக்கிறது. பதிலளிக்கக்கூடிய நியூரோஸ்டிமுலேஷன் (RNS) முறையில் உள்வைப்புகக் மூளை செயல்பாட்டை கண்காணித்து சரி செய்கிறது.
உணவுமுறை
கெட்டோஜெனிக் உணவுமுறையான அதிக கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் திட்டத்தில் வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் குறைக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
போதுமான தூக்கம், மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் வலிப்புத் தூண்டுதல்களைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வலிப்பைக் குறைக்கலாம்.
இவ்வாறு கால்-கை வலிப்பு ஒரு சமாளிக்கக்கூடிய நிலையாகும். ஆனால், இதற்கான சரியான நேரத்தைக் கண்டறிவது அவசியமாகும். மேலும், இதற்கு தனிப்பட்ட சிகிச்சை திட்டம் தேவைப்படுகிறது. மேலும், சரியான கவனிப்புடன், கால்-கை வலிப்பு உள்ளவர்கள் நிலையான வாழ்க்கையை வாழ முடியும். இது தவிர, விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலமும், தவறான எண்ணங்களை நீக்குவதன் மூலமும் கால்-கை வலிப்புடன் வாழ்பவர்களுக்கு ஒரு ஆதரவான சூழலை உருவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: World Purple Day: வலிப்பு நோய் வகை, அறிகுறி மற்றும் சிகிச்சை முறை…
Image Source: Freepik