Bird Flu Symptoms Causes And Diagnosis: சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் மனிதர்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இது நாட்டில் H9N2 வைரஸின் இரண்டாவது நிகழ்வைக் குறிக்கிறது. சில நாள்களுக்கு முன்பு இந்தத் தொற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தைக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனுடன், சமீபத்திய கண்டுபிடிப்பில் பசுவின் பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது மனித ஆரோக்கியத்திற்கு சாத்தியமான அபாயங்களை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலுக்குக் காரணமாக இருப்பது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆகும். இது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளைத் தான் எப்போதாவதுதான் பாதிக்கும் என அறியப்படுகிறது. இதில் பசுவின் பாலில் காணப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சாரதா மருத்துவமனையின் மூத்த உணவு நிபுணர் டாக்டர் ஸ்வேதா ஜெய்ஸ்வால் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பசுவின் பாலில் காணப்படும் பறவைக் காய்ச்சலால் ஏற்படும் விளைவுகள்
மனிதர்களுக்கு பரவுதல்
பசும்பாலில் உள்ள பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்குமா என்பது முதன்மையான கவலையாகும். அப்படியெனில், பறவைக் காய்ச்சல் ஆனது அசுத்தமான பால் அல்லது பால் பொருட்களை உட்கொள்ளும் நபர்களுக்கே ஏற்படுகிறது. இந்த நோயின் தீவிரம் லேசான காய்ச்சலில் தொடங்கி, கடுமையான சுவாச நோய் வரை மாறுபடலாம்.
பொது சுகாதாரம்
பால் விநியோகத்தில் கண்டறியப்பட்ட இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ், பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து விரைவான பதிலைத் தூண்டுகிறது. பால் பண்ணைகள் மற்றும் பதப்படுத்தும் வசதிகளை கடுமையான கண்காணித்தல், அசுத்தமான பால் பொருள் பெறுவதைத் தடுத்தல், சோதனை செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பான உணவு கையாளும் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு கற்பித்தல் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Before Swimming Tips: நீச்சலுக்கு செல்லும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்!
தடுப்பு நடவடிக்கைகள்
மனிதர்களுக்கு பரவக்கூடிய இந்த வகை நோய்த்தொற்றின் அபாயத்தைக் கணிப்பதற்கு கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கான வழக்கமான கண்காணிப்பு பால் உற்பத்தி மற்றும் செயலாக்கத்தின் போது சுகாதார நடைமுறைகளை உறுதி செய்தல் போன்றவை இதில் அடங்கும்.
இவை அனைத்தும் பசுவின் பாலிலிருந்து பரவும் பறவைக் காய்ச்சலுக்கு மருத்துவர் ஸ்வேதா ஜெய்ஸ்வால் கூறிய தகவல்கள் ஆகும்.
H9N2 பறவைக் காய்ச்சல்
ஏவியன் இன்ஃபுளுயன்சா அல்லது பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வகை A வைரஸ்களால் ஏற்படுவதாகும். இது முதன்மையாக பறவைகளைப் பாதிக்கிறது. அதே சமயம், மனிதர்களையும் பாதிக்கலாம். H9N2 ஆனது H5N1 போன்ற பிற விகாரங்களைக் காட்டிலும், குறைவாகவே காணப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம்.
பறவைக் காய்ச்சல் பரவும் முறை
இந்த வைரஸ் ஆனது பொதுவாக பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அவற்றின் உமிழ்நீர், கழிவுகள் அல்லது சுரப்புகளால் மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழலுடன் நேரடி தொடர்பின் மூலம் பரவுகிறது. அதிலும் குறிப்பாக, கோழி பண்ணைகள் அல்லது பறவைகளின் சந்தைகள் போன்ற அமைப்புகளில் மனித நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Drink Water After Urinating: சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? தீமைகள் இங்கே!
மனிதர்களில் பறவைக் காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள்
பொதுவாக பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடலாம். இதன் பொதுவான வெளிப்பாடுகள் சிலவற்றை இதில் காணலாம்.
சுவாச அறிகுறிகள்
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான மேல் சுவாச பாதை நோய்த்தொற்றுகளை அனுபவிக்கலாம். மேலும் இது கடுமையான சுவாச பிரச்சனைகளைத் தரலாம்.
நரம்பியல் அறிகுறிகள்
என்செபலோபதி, மூளை அழற்சி போன்ற தீவிர சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.
இரைப்பை குடல் அறிகுறிகள்
பறவைக் காய்ச்சலால் இரைப்பை குடல் அறிகுறிகளான வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.
கன்ஜக்டிவிடிஸ்
கண் சிவத்தல், எரிச்சல் மற்றும் கண் நோய்த்தொற்றுக்கள் போன்றவை ஏற்படலாம்.
பறவைக் காய்ச்சலைக் கண்டறியும் முறை
மனிதர்களில் பறவைக் காய்ச்சல் இருப்பதைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு ஆய்வக சோதனை தேவைப்படுகிறது. அதே சமயம், அவ்வப்போது காய்ச்சலைக் கண்டறிவதற்கான அதன் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு புதுப்பிக்கிறது. மேலும், வைரஸின் துல்லியமான அடையாளத்தை உறுதிசெய்ய மூலக்கூறு முறைகளைப் பயன்படுத்துவது அவசியமாகும். எனினும் ஆரம்ப கால சிகிச்சையின் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Blood Donor Day: இரத்த தானம் செய்யும் முன் இத தெரிஞ்சிக்கோங்க பாஸ் .!
Image Source: Freepik