Poultry disease kills chickens in Telangana: தெலுங்கானாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஒரு மர்ம நோய் பதிவாகியுள்ளது. ANI-ன் படி, வனபர்த்தி மாவட்டம், மதனபுரம் மண்டலம், கொன்னூரில் இந்த மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வனபர்த்தி மாவட்ட கால்நடை பராமரிப்பு அதிகாரி கே. வெங்கடேஷ்வர் அவர்கள்,”இந்த நோய் ஏற்கனவே மூன்று நாட்களுக்குள் சுமார் 2,500 கோழிகள் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.” மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து, அந்த மாதிரிகளை ஆய்வக சோதனைக்காக சேகரித்தனர்.
இதில் அதிகாரிகள் கூறியதாவது,”16 ஆம் தேதி 117, 17 ஆம் தேதி 300, மீதமுள்ளவை 18 ஆம் தேதி அதன் பிறகு தகவல் தெரிவிக்கப்பட்டு, 19 ஆம் தேதி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது” எனத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை, 5,500 பறவைகள் கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்படுகிறது. ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் மாநில அரசு அதன் கட்டுப்பாட்டு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Bird Flu H5N1: உயிரை பரிக்குமா பறவைக் காய்ச்சல்.? WHO அதிர்ச்சி தகவல்.!
நோய் பரவுதலைத் தடுக்க
ANI-யின் கூற்றுப்படி, பிப்ரவரி 14 ஆம் தேதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் இந்த நோய் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் சிவப்பு மற்றும் கண்காணிப்பு மண்டலங்களை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் உள்ள அதிகாரிகள் கோழி இறப்புகள் பறவைக் காய்ச்சலுடன் தொடர்புடையதா அல்லது வேறு அடையாளம் காணப்படாத காரணமா என்பதைத் தீர்மானிக்க நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கண்காணிப்பு நடவடிக்கை
கோழிப்பண்ணையில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பண்ணையை விரைவாக சுற்றி வளைத்தனர். மேலும், இந்தப் பகுதியை கால்நடை குழுக்கள் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு சுத்தப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து பெறப்படும் கோழிப் பொருட்கள் நுகர்வுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கோழிகளை அதிக வெப்பநிலையில் சமைப்பதன் மூலம் சாத்தியமான வைரஸ்களை நடுநிலையாக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் பரவலைத் தடுக்க ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பறவைகளைக் கொண்டு செல்வதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் மாநிலம் தழுவிய கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கை
எலுரு, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி போன்ற மாவட்டங்கள் இலட்சக்கணக்கான கோழிகள் இறந்ததது தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், சில தடுப்பு நடவடிக்கைகளைக் கையாளலாம்.
கோழிப்பண்ணைகளில் வெப்பநிலை கட்டுப்பாடுகளைப் பராமரிக்கவும், கடுமையான சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கவும் விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: Bird Flu: பரவி வரும் பறவைக் காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
அதிகாரப்பூர்வ அறிக்கைகள்
வைரஸ் தொற்றுகள் மற்றும் பருவகாலமற்ற வானிலை பெரும்பாலும் கோழி இறப்புகளுக்கு காரணமாகிறது. ஆய்வக முடிவுகளில் பறவைக் காய்ச்சல் என வெளிவந்தால் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக வெங்கடேஸ்வர ரெட்டி கூறியுள்ளார்.
மேலும் நோய்த்தடுப்பு, கால்நடை பராமரிப்புத் துறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சித் திட்டங்கள் நடத்தி வருகிறது. சோதனை முடிவுகளின் அடிப்படையில் மாநில அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இது தவிர, தெலுங்கானா முழுவதும் கோழிப் பண்ணைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது, அசாதாரண பறவை இறப்புகள் குறித்து உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Bird Flu: 4 வயது குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்.. உறுதி செய்த WHO
Image Source: Freepik