சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல்.! குழந்தைகள் ஜாக்கிரதை.!

  • SHARE
  • FOLLOW
சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல்.! குழந்தைகள் ஜாக்கிரதை.!


இது குறித்து கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிபாக இந்த நோய் அதிகமான குழந்தைகளை தாக்குகிறது.  

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்படுள்ள நிமோனியாவால் (pneumonia), இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்றும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காசநோயை எதிர்த்துப் போராட புதிய கண்டுபிடுப்பு! என்னான்னு தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகளில் இந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் சீனாவில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ஆபத்து எதுவும் இல்லை என்றும், இந்த மர்ம நோயை பார்த்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் சீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

குழந்தைகளை நிமோனியாவில் இருந்து பாதுகாப்பது எப்படி? 

பெரியவர்களை விட குழந்தைகளில் நிமோனியாவின் ஆபத்து அதிகமாக உள்ளது. பொதுவாக வானிலை மாறும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, குழந்தைகளை முழுக் கை ஆடைகளை அணிய வைக்க வேண்டும். துளசி இலைகளின் கஷாயம் அல்லது சாறும் கொடுக்கலாம். மஞ்சள் நீரை சூடாக்கி மார்பில் மசாஜ் செய்யலாம். நிமோனியாவைத் தவிர்க்க குழந்தைகளுக்கு காய்ச்சல் தடுப்பூசியும் போடலாம். 

Image Source: Freepik

Read Next

Parenting Tips: உங்கள் மகளின் நம்பிக்கையை அதிகரிக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்!

Disclaimer

குறிச்சொற்கள்